• home

கம்பு தயிர் சாதம்

தேவையான பொருட்கள்:

கம்பு - 1/2 கப்
தண்ணீர் - 4 கப்
புளிக்காத தயிர் - 1 கப்
கேரட் -1
மாங்காய் - சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு :

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/4 இன்ச்

செய்முறை:

• வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை, மாங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• இஞ்சிசை துருவிக் கொள்ளவும்.

• கம்பை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

• தண்ணீர் அதிகம் இருந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, சற்று கெட்டியாகும் வரை கிளறி விட்டு இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

• பின்பு அத்துடன் தயிர், பின் கேரட், கொத்தமல்லி, மாங்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை,பச்சை மிளகாய், இஞ்சி போட்டு தாளித்து, கம்புடன் சேர்த்து கிளறவும்.

• சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி!!!

சுகப்பிரசவமாக தேன் சாப்பிடுங்க

சுகப்பிரசவமாக தேன் சாப்பிடுங்ககர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதம் முதல் சாதம் கொதிப்பதில் முதல் கொதி வந்ததும் அந்த கொதிநீரை ஒரு டம்ளர் எடுத்து சிறிது பணங்கற்கண்டு சிறிது வெண்ணெய் சேர்த்து குடிக்க வேண்டும். சிறிது வெந்தயம் சிறிது பச்சரிசி 5 பல் பூண்டு மூன்றையும் குழைய வேகவைத்து கடைந்து குடிக்கலாம்.

பாலுடன் பூண்டை உரித்து போட்டு நன்கு வேகவைத்து கடைந்து இரவில் இதனை சாப்பிடலாம். கர்ப்பிணிபெண்கள் மாதுளம் பழம் ஜூஸ் குடிக்கலாம். தாய், சேய் இருவருக்கும் மிகவும் சிறந்தது மட்டுமில்லாமல் ரத்தம் விருத்தியாகும்.

கர்ப்பிணிபெண்கள் ஒன்பதாவது மாதம் முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாய் குருந்தோட்டி வேர் கஷாயம் சாப்பிடலாம். சோம்பை சிறிது வறுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து ஒன்பதாம் மாதம் முதல் குடிக்க வேண்டும்.

இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரை இடுப்பு கால்களுக்கு ஊற்றி கொள்ள வேண்டும். பிரசவவலி எடுத்தவுடன் தேனை எதுவும் கலக்காமல் நேரடியாக உள்ளுக்குள் சாப்பிடவேண்டும். மீதமுள்ள தேனை கருஞ்சீரகம் பொடி கலந்து வயிற்றைச் சுற்றித் தடவினால் எந்த வித சிரமமும் இன்றி சுகப்பிரசவம் ஏற்படும்.

இது தவிர நாடி சுத்தி பிராணயாமத்தையும் பக்தகோணாசனம் என்ற கர்ப்பஸ்திரீகள் செய்யக்கூடிய ஆசனத்தையும் விடாமல் செய்து வர வேண்டும்.

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்பதை தெரிந்துக்கொள்ள கர்ப்பமான பெண்ணின் தனத்தில் சுரக்கும் தாய்ப்பால் துளித்துளியாக சிறிதளவே வருமானால் ஆண்குழந்தை, கெட்டியாக பிசின் போல சிரமத்துடன் வருமானால் பெண்குழந்தை என்று தெரிந்துகொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்பெண்களுக்கு பொதுவாக கர்ப்பத்தின் அறிகுறிகள் அவர்களது முதல் தவறிய மாதவிடாய் காலத்திலிருந்தே தெரிய ஆரம்பிக்கும். உடலில் கர்ப்ப ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும்.

இந்த காலத்தில் கருவின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் மற்றும் அனைத்து உறுப்புகளையும் உருவாகின்றன. எனவேதான், இந்த காலகட்டத்தில் மகப்பேறு மருத்துவரின் அனுமதியின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.

சில மருந்துகள் கருவை ஊனமாகவோ, கலையவோ செய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும் முதல் 3 மாதங்களில் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகியவை நம்மை அணுகாமல் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். மேலும் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

கர்ப்பகால அறிகுறிகள் சிலருக்கு வேறு சில காரணங்களாகவும், வேறு சில வியாதிகளாகவும்கூட ஏற்படலாம். அதனால், அறிகுறிகள் வைத்து கர்ப்பத்தை கண்டறிவதைவிட நம்பகமான அறிவியல் முறை பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது.

பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் 2 அல்லது 3 மாதங்களில் கருதரிப்பதை உறுதி செய்துகொள்ள முடியும் என்றாலும் சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றின் மூலமே கர்ப்பம் தரிப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.

மேலும், கர்ப்பம் கருப்பைக்குள்ளேதான் உள்ளது என்பதையும் கட்டாயம் ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். கருப்பைக்கு வெளியே கூடியிருந்தால் அது தாயின் உயிருக்கே ஆபத்தாய் அமைந்துவிடும்.

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் விளாம்பழம்

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் விளாம்பழம்பருவப் பெண்களை படுத்தும் பெரும் பிரச்சனை பருதான்! பருக்களை ஓட ஓட விரட்டலாம் இந்த விளாங்காய் கிரீமின் உபயத்தால்!

பயத்தம் பருப்பு-2 டீஸ்பூன்,
விளாம்பழ விழுது - 2 டீஸ்பூன்,
பாதாம் பருப்பு - 2

இவை அனைத்தையும் முந்தின நாள் இரவே ஊற வைத்து மறுநாள் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். விளாங்காய் கிரீம் ரெடி! இந்த கிரீம்-ஐ முகத்தில் பூசினால் நாள்பட்ட பருக்கள் கூட மாயமாக மறைந்துவிடும்.

தழும்பும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். (கிரீமை உபயோகிக்கும் முன், கைகளை நன்றாகக் கழுவுவது அவசியம். பருக்கள் முற்றி அதிலிருந்து ரத்தம் வடிந்தாலும் இந்த கிரீம் ஆன்டி செப்டிக்காக செயல்பட்டு மருத்துவப் பலனை தரும்).

விளாங்காயும் பாதாம் பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம் பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும்.

பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்இன்றைய பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள படாதபாடு படுகிறார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண்களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை புரிந்து கொள்ளாமல் சிவப்பாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு விளம்பரங்களில் வரும் கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.

பெண்கள் இயற்கை முறையில் அழகாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சத்தான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே நீங்கள் ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும் இருக்கலாம் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

அது உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது தினமும் குறைந்தது 20 முதல் 25 டம்ப்ளர் வரை தண்ணீர் குடியுங்கள். இரவில் நன்றாக தூங்குவது உங்கள் அழகை பாதுகாக்க மிகவும் முக்கியம். சரியான தூக்கம் இல்லை என்றால் முகம் வாடி, கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும்.

வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் அல்லது கடலை மாவால் கழுவவும். கடலை மாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்தும் கழுவலாம் அல்லது வெறுமனே முகத்தில் தடவியும் கழுவலாம்.

முகம் பளப்பளப்பாக தேன் அல்லது பாலாடையை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவலாம். அதை வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தினமும் காலையில் 8 முதல் 10 பாதாம் பருப்பு சாப்பிடுவது உங்கள் சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கம்பு - வெந்தய தோசை

கம்பு - வெந்தய தோசைதேவையான பொருட்கள் :

கம்பு மாவு -1 கப்,
அரிசி மாவு -1 கப்,
வெந்தயம் -1/4 கப்,
புளித்த தயிர் 1/4 கப்,
பச்சை மிளகாய் -5,
உப்பு ருசிக்கேற்ப,

தாளிப்பதற்கு:

சீரகம் -1 ஸ்பூன்,
ஒன்றிரண்டாக உடைத்த மிளகு -1 ஸ்பூன்,
கடுகு -1/4 ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

• வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைத்து அதை வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ளவும்.

• பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, அரிசி மாவு, அரைத்த வெந்தயம், மிளகாய் விழுது, தயிர் சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு போல் கரைத்துக் கொள்ளவும். தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், மிளகு தாளித்து மாவில் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

• பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி முறுகலாக வந்ததும் எடுக்கவும்.

• வெந்தயம் சேர்ப்பதால் இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

காப்பர் டி போடப்போகிறீர்களா?

காப்பர் டி போடப்போகிறீர்களா?
இன்றைய வாழ்க்கைச் சூழலில், ‘வீட்டுக்கு ஒரு வாரிசு போதும்’ என்ற மனரீதியில்தான் பெரும்பாலான தம்பதிகள் இருக்கின்றனர். ஒரு குழந்தை பிறந்ததும், அடுத்த குழந்தை வேண்டாம் என்று விரும்புபவர்கள், ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள விஷயம்.

கருத்தடையில் தற்காலிகம், நிரந்தரம் என்று இரண்டு வகைகள் உள்ளன. காப்பர் டி பொருத்துவது என்பது தற்காலிகமானது. காப்பர் டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. காப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக் குழாயிலேயே தங்கிவிடலாம்.

எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது. இல்லையெனில், நோய்த் தொற்று வர வாய்ப்பு இருக்கிறது. காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம். அதன் பிறகு அகற்றுவது மிகவும் கஷ்டம்’.காப்பர் டி போடுவதற்கு முன்பும், பின்பும் தெரிந்துகொள்ள வேண்டியவை.

காப்பர் டி போடுவதற்கு முன் கவனிக்கவேண்டியவை :

• வயது, இது தான் முதல் முறையா என்பது பற்றிய விவரங்கள் தெரிவிக்க வேண்டும்.
• மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.
• குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும்.
• ரத்தம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம்.

காப்பர் டி யை அகற்றுவதற்கு முன்கவனிக்க வேண்டியவை :

• காப்பர் டி நகர்ந்து இருந்தாலும், கண்டிப்பாக ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும்.
• காப்பர் டி, கர்ப்பப்பைக்கு உள்ளே இருந்தால், மயக்க மருந்து கொடுத்துதான் எடுக்க வேண்டி இருக்கும். நோயாளிக்கு, வலி தாங்க முடியாமல் அதிர்ச்சியில்கூட உயிர் பிரிய வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பப்பைக்குள் சீழ் உண்டாகி, நோய்த் தொற்று வரலாம்.

இதனால், அதிக வலி, ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் இருக்கும். கெட்ட வாடை வீசும். மேலும், அகற்ற முடியாமல் போனால், அறுவைசிகிச்சைக் கூடத்துக்கு அழைத்துச்சென்று மயக்க மருந்து கொடுத்து, கர்ப்பப்பைக்குள் எண்டோஸ்கோபி மூலமாகப் பரிசோதிக்க வேண்டும்.

• திருமணமாகாதவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் போடுவது இல்லை.

• கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.