• home
Home » » ஆரோக்கியத்திற்கு ஐந்து வழிமுறைகள்

ஆரோக்கியத்திற்கு ஐந்து வழிமுறைகள்


உண்ணும் உணவில் கலோரிகள் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றால் உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டியதில்லை, குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளை உண்ண வேண்டும் அல்லது உண்ணும் உணவில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும்,
* குறைந்த கலோரிகள் உள்ள உணவைத் தேர்ந்தெடுங்கள், அல்லது அதிக கலோரிகள் உள்ள உணவுகளைக் குறைவாக உண்ணுங்கள், உதாரணமாக சர்க்கரையே எடுத்துக் கொள்ளுங்கள், அதனால் அதிக கலோரிகள் உடலில் சேருகின்றன, சர்க்கரைக்குப் பதிலாக குறைந்த கலோரிகள் அளிக்கும் சாக்கிரீன் போன்ற வேறு இனிப்புப் பொருளைப் பயன்படுத்தலாம்
* உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு வழி உள்ளது. உணவு சமைத்த பின்னர் உப்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது உணவைப் பரிமாறிக் கொண்டதும் உப்பைப் போட்டுக்கொள்ளலாம். அந்தச் சமயங்களில் உப்பைச் சற்று குறைத்தே போட்டுக்கொள்ளுங்கள். குறைவாக உப்பைப் பயன்படுத்துமாறு மற்றவர்களுக்கும் கூறுங்கள். அது சமயத்திற்கு நினைவுக்கு வரும்.
* தாகமாக உள்ளபோது குளிர் பானங்களை வாங்கிக் குடிப்போம். அதனால் பணம் செலவாவது மட்டுமல்ல உடல் நலனும் கெடும். பிற கேடுகளும் ஏற்படக்கூடும். அதனால் சுத்தமான தண்ணீரைக் குடியுங்கள். தண்ணீரில் 0 கலோரி உள்ளது . தாகமும் மறையும். செலவும் இருக்காது.
* குழந்தைகளுக்குப் பரிமாறும் போது குறைவாகப் பரிமாறுவோம் அல்லவா! அதை நாமும் பின்பற்றலாம். குறைவாக பரிமாறிக் கொள்ளுங்கள். சிறிய தட்டில் உணவை உண்ணுங்கள். குறைவான அளவில் பலமுறை உண்ணுவது உடல் நலனுக்கு நல்லதென்று ஆய்வுகள் கூறுகின்றன.
* பசி எடுக்கும்போது கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுவதைக் குறைத்து சலாட்களை (பழங்களை வெட்டித் துண்டாக்கிய கலவி) அதிகமாக உண்ணுங்கள். பசியும் போகும், கலோரியும் குறைவாக இருக்கும்.

healthy

0 comments:

Post a Comment