• home
Home » » முகம் ரொம்ப அடி வாங்குன மாதிரி இருக்கா? இத ட்ரை பண்ணுங்க…

முகம் ரொம்ப அடி வாங்குன மாதிரி இருக்கா? இத ட்ரை பண்ணுங்க…


சிலருக்கு முகத்தில் பள்ளங்கள் அதிகம் இருக்கும். அவற்றை சரும துளைகள் என்று சொல்வார்கள். இத்தகைய சரும துளைகளானது அதிகம் இருந்தால், அவை சருமத்தில் பருக்கள், பிம்பிள் போன்றவற்றை அதிகம் ஏற்படுத்தும். ஏனெனில் இப்படி இருப்பவர்களுக்கு சரும துளைகளானது திறந்து இருப்பதால், அந்த சரும துளைகளின் வழியே அழுக்குகள் அதிகம் நுழைவதுடன், சருமத்தில் எப்போதும் அதிகப்படியாக எண்ணெய் வழியும்.04-1396596436-4rosewater
ஆகவே அப்படி பள்ளங்கள் இருப்பவர்கள், அதனை மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் இயற்கை வழிகளைப் பின்பற்றி மறைக்க முயல வேண்டும். இங்கு முகத்தில் உள்ள சரும துளைகளை மறைக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


தக்காளி ஜூஸ்

முகத்தில் திறந்திருக்கும் சரும துளைகளை மறைக்க தினமும் தக்காளி ஜூஸைக் கொண்டு மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும். ஒருவேளை தினமும் செய்ய நேரம் இல்லாவிட்டால், வாரத்திற்கு இரண்டு முறையாவது மேற்கொள்ள வேண்டும்.
முட்டை முட்டையின் வெள்ளைக் கருவில், எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வேண்டும். இப்படி செய்தால் சருமத்திற்கு தேவையான புரோட்டீன் கிடைத்து, சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி, சரும துளைகள் மறைய ஆரம்பிக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், விரைவில் சரும துளைகள் மறைந்துவிடும்.
ஐஸ் கட்டிகள் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், சரும துளைகளானது மூடி, சருமம் பொலிவோடு இருக்கும். அதற்கு இந்த முறையை தினமும் இரவில் படுக்கும் போது செய்து வர வேண்டும்.
ரோஸ் வாட்டர் சரும துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை போக்குவதில் ரோஸ் வாட்டர் மிகவும் சிறந்தது. எனவே தினமும் ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தை துடைத்துவிட்டு, பின் எந்த ஒரு பராமரிப்பையும் மேற்கொள்ளுங்கள்.
பழச்சாறு பழச்சாறுகளில் அன்னாசி மற்றும் பீச் போன்றவற்றைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், திறந்துள்ள சரும துளைகளானது மூடிவிடூம். இதனை அன்றாடம் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
கொத்தமல்லி தினமும் கொத்தமல்லியை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் உள்ள பள்ளங்கள் மறைய ஆரம்பிக்கும்.
- See more at: http://yarlosai.com/?p=65464#sthash.ikBF4eEV.dpuf

0 comments:

Post a Comment