• home
Home » » லண்டனில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மீட்பு'

லண்டனில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மீட்பு'



லண்டனில் கடந்த 30 வருடமாக மிகவும் மோசமான நிலைமையில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 3 பெண்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
தெற்கு லண்டன் பகுதியில் உள்ள ஒரு வீடு ஒன்றில் தானும் இன்னும் இரு பெண்களும் அடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதாக ஒரு பெண் தமக்கு தொலைபேசியில் அழைத்துக் கூறியதாக ''ஃபிரீடம் சரிட்டி'' என்னும் தொண்டு அமைப்பு கூறியுள்ளது.
69 வயதான ஒரு மலேசியப் பெண், 57 வயதான ஒரு ஐரிஸ் பெண் மற்றும் 30 வயதான பிரிட்டிஷ் பெண் ஆகியோரே இவ்வாறு வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பில் லம்பேர்த் பகுதியில் கைது செய்யப்பட்ட 67 வயதான ஒரு ஆணும், பெண்ணும், பின்னர் ஜனவரி மாதம் வரை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மிகவும் மோசமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்கள், வெளியுலகுடன் பெரிய அளவில் தொடர்பு இல்லாது, கடந்த 30 வருடமாக இவ்வாறு வைக்கப்பட்டிருந்திருப்பதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

0 comments:

Post a Comment