
உடனுக்குடன் டாக்டரை பார்த்து ஆலோசனை பெற்று எலும்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்துவிட வேண்டும். இது தொடர்பான டிப்ஸ்களை பிரபல மருத்துவர் கமலி ஸ்ரீபால் வழங்கியுள்ளார். உங்கள் காலில் சுளுக்கா? அல்லது சற்று பலமான அடியா? PRICE முறையை கையாளுங்கள்.
P - Protection
R - Rest
I - Ice
C - Compression
E - Elevation
Protect - பாதுகாத்தல் - பாதிக்கப்பட்ட இப்பகுதியினை மேலும் பழுதாகாமல் பாதுகாத்தல் வேண்டும்.
Rest - ஓய்வு - 48-72 மணிநேரம் அதாவது 2 முதல் 3 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஓய்வு கொடுங்கள்.
Ice - ஐஸ் கட்டி - குளிர் ஒத்தடம் 2 முதல் 3 நாட்களுக்கு கொடுங்கள். உடைத்த ஐஸ் கட்டிகளை ஒரு டவலிலோ அல்லது பாலித்தீன் கவரிலோ பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுங்கள்.
இதனை நாள் ஒன்றுக்கு 4 - 5 முறை செய்யுங்கள். ஐஸ் பையினை அப்படியே பாதிக்கப்பட்ட பகுதி மீது வைத்து விடாதீர்கள். இது அதிக குளுமையினால் காயத்தை ஏற்படுத்தும்.
Compress - அழுத்தம் - எலாஸ்டிக் அல்லது பேன்டேஜ் கொண்டு அதிக இறுக்கம் இல்லாமல் சுற்றி விடுங்கள். இது ரத்த ஓட்டத்தினை தடை செய்யும்படி இருக்கக்கூடாது. இரவு தூங்கப் போவதற்கு முன் அதனை கழட்டி விடுங்கள்.
Elevation - காலை சற்று உயர வைத்தல். இரண்டு தலையணை வைத்து காலை அதன் மீது தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
* அடிபட்ட மூன்று நாட்களுக்குள் சூடு ஒத்தடம், மசாஜ், அடிபட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தல் போன்றவை பாதிப்பினை அதிகப்படுத்தி விடும்.
நீங்கள் கீழே விழுந்து விட்டீர்களா?
எலும்பு முறிவு என அச்சமாக இருக்கிறதா? அதற்கான அறிகுறிகள்.
* தாங்கமுடியாத வலியும், வீக்கமும்.
* மாறுபட்ட நிறம்.
* நகர்த்த முடியாமை, நகர முடியாமை.
* அடிபட்ட இடத்தில் வித்தியாசமான வளைவு, தொய்வு. உடனடியாக எலும்பு மருத்துவரை அணுகவும்.
எலும்பின் அதிசயம்!
* உடலில் உள்ள 206 எலும்புகளில் பாதிக்கு மேல் கை, கால்களில் தான் உள்ளன. 52 எலும்புகள் பாதங்களில் உள்ளன.
* ஒருவரின் வாழ்நாளில் ஒவ்வொரு பாதமும் பூமியை, சுமார் 10 மில்லியன் முறை தரையில் தொடுகின்றது (நடப்பது, ஓடுவது, குதிப்பது) இவை அனைத்தும் இதில் அடங்கும்.
* முகத்தில் 14 எலும்புகளும், 54 எலும்புகள் இரண்டு கைகளிலும் உள்ளது. காதில் உள்ள எலும்பு மிக மிக சிறியது. 2.5 மில்லி மீட்டர் நீளம் உடையது.
* எந்த உடற்பயிற்சி, இதயத் துடிப்பினை கூட்டி, ரத்த ஓட்டத்தினை தூண்டி நன்கு மூச்சு விடச் செய்கின்றதோ, அதனை ஏரோபிக்ஸ் என்கிறோம். இது இசையோடு ஒத்துச் செய்யப்படுவதால், மனதினையும் மகிழ்ச்சியாக வைக்கின்றது. இவ்வகையான உடற்பயிற்சி
* இருதயம், ரத்த ஓட்டம், நுரையீரலை சீர் செய்கின்றது.
* உடல் எடை குறைய உதவுகின்றது.
* உடல் இயக்கம் எளிதாகின்றது.
* சதைகள் ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் இருக்கின்றன.
* எலும்பின் உறுதி நிலைக்கும்.
0 comments:
Post a Comment