விரிப்பில் கோமுகாசனத்தில் உட்கார வேண்டும். வலது பக்க முழங்கால், இடது பக்க முழங்காலுக்கு மேலாக இருக்க வேண்டும். பின்னர் வலது பக்க முழங்கையை வளைத்து, தலைக்கு மேலாக தூக்கி பின்புறமாக முதுகுப் பகுதிக்கு வளைத்து கொண்டுவரவும். அதேசமயம் இடதுகையை பின்புறமாக மடித்து வலது கை விரல்களை கொக்கி போன்று பிடித்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு கைகளும் பின்புறம் உள்ள நிலையில் சிறிது நேரம் இயல்பாக மூச்சுவிடவும். பின்னர் மெதுவாக விரல்களை விடுவித்து கைகளை ஆரம்ப நிலைக்கு கொண்டு வரவும். இந்த ஆசனத்தில் இருக்கும்போது தலையும், கழுத்தும் முதுகெலும்புக்கு நேராக இருக்க வேண்டும். இதேபோல் மற்றொரு கை, மற்றொரு காலை மடக்கியும் பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் சோர்வு, டென்ஷன், கவலை குறையும். சிறுநீரக செயல்பாட்டை தூண்டுகிறது. நீரிழிவு, முதுகு வலி, கால் வலி, வாத நோய்க்கும் இந்த ஆசனம் சிறந்த மருந்தாக செயலாற்றுகிறது. கால் தசைகள் மிருதுவாக மாறும். மூட்டு வலி, தோள்பட்டை வலி வராமல் தடுக்கும்.

0 comments:
Post a Comment