நீச்சல் குணங்களில் நீந்தி, கோடையில் வெப்பத்தினை தணித்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும் அதிகம். நீச்சலுக்கு செல்லும் முன் முடியை சற்று நனைத்து ஏதாவது ஒரு கண்டிஷனர் சிறிது தடவி பிறகு நீந்தச் செல்லுங்கள். இது தலை முடிக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும்.
முடியனை அதிகமாக விரித்து விடாமல் ஜடையோ அல்லது முடித்தோ வைப்பது வெப்ப தாக்கத்தினை கட்டுப்படுத்தும். கொதிக்கும் வெயிலில் அப்படியே தலையை காட்டிக் கொண்டு செல்லாதீர்கள். `சன்ஸ்கீரின்' தடவ வேண்டும். முடிந்தவரை 11 முதல் 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்.
தலைமுடி பராமரிப்பு `மாஸ்க்' கண்டிப்பாய் உபயோகியுங்கள். `hair dryer' கண்டிப்பாக பயன்படுத்தாதீர்கள். சுடுநீரில் தலைமுடி அலச வேண்டாம். மென்மையான ஷாம்பூ (அ) வெந்தயம் கலந்த சீயக்காய் பயன்படுத்துங்கள். வாரம் இருமுறை நன்றாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
அப்போது தான் உடலில் உள்ள சூடு குறையும். ஒரு நாளைக்கு 3 லிட்டா தண்ணீர் குடியுங்கள். அப்போது தான் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். வெளியில் செல்லும் போது முகத்தை நன்றாக மூடிக் கொண்டு செல்லுங்கள். அது தான் உங்கள் சருமத்தை வெயிலிருந்து காக்கும்.
Home »
பெண்கள் உலகம்
» கோடை கால தலை முடி பராமரிப்பு
கோடை கால தலை முடி பராமரிப்பு
Posted by suj
Posted on 6:13 PM
with No comments
0 comments:
Post a Comment