இன்றைய நாட்களில் தலைக்கு மேலுள்ள பிரச்சனைகளில், நம்மால் சமாளிக்க முடியாத மற்றுமொரு பிரச்சனையாக பொடுகுத் தொல்லை உள்ளது. நம்மில் பலர் பல விதமான இரசாயனங்கள் மற்றும் ஷாம்புக்களைப் பயன்படுத்தி பொடுகை விரட்ட முயற்சிப்போம்.
நம்முடைய முயற்சிகள் எல்லாம் தற்காலிக பலன்களைக் கொடுத்திருந்தாலும், மீண்டும் பொடுகு வராமல் தடுக்க இயற்கை வழிமுறைகள்:
* ஆப்பிள் சீடர் வினிகரின் அமிலத்தன்மை உங்களுடைய மண்டைத் தோலின் (Scalp) pH அளவை மாற்றி, அதனை உறுதியானதாக்கி விடுவதால், பொடுகை உருவாக்கும் ஈஸ்ட் அந்த இடத்தில் தங்கி வளர முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக பொடுகுகளை அறவே ஒழிக்க முடியும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, குளித்து முடித்த பின் இறுதியில் தலையை அலச வேண்டும்.
* தலையை நன்றாக ஈரமாக்கி விட்டு, மண்டைத் தோலில் சமையல் சோடாவைப் போட்டு நன்றாக அழுத்தித் தேய்க்கவும். ஷாம்புவைப் பயன்படுத்த வேண்டாம். பொடுகுகளை உருவாக்கும் பூஞ்சைகளை சமையல் சோடா சுத்தம் செய்து விடும்.
* தேங்காய் எண்ணெயை தலையில் நன்றாகத் தடவி விட்டு, இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். காலையில் எழுந்து மென்மையான ஷாம்பு போட்டு, அந்த எண்ணெயை நீக்கினால், பொடுகும் அத்துடன் பறந்துவிடும்.
* முடியில் வேர்க்கால்களில் 2 தேக்கரண்டிகள் எலுமிச்சைச் சாற்றை விட்டு, நன்றாகத் தண்ணீர் விட்டு அலசவும். பின் 1 கோப்பை தண்ணீருடன் எலுமிச்சைச் சாற்றை விட்டு நன்றாகக் கலக்கி, ஷாம்பு போட்ட பின்னர் எலுமிச்சை தண்ணீரைக் கொண்டு கடைசியாக தலைமுடியை நன்றாக அலச வேண்டும். இதனால் எலுமிச்சையின் அமிலத்தன்மை உங்களுடைய மண்டைத் தோலின் pH அளவை சமப்படுத்துவதால், பொடுகுகளை விரட்ட முடிகிறது.
* பூண்டில் இருக்கும் பூஞ்சைக்கு எதிரான குணங்கள் பொடுகுகளை உருவாக்கும் பாக்டீரியாக்களை ஒழித்து விடச் செய்யும் தன்மை கொண்டது. பூண்டை நன்றாக அரைத்து, தேனுடன் கலந்து உங்களுடைய தலையில் போட்டு நன்றாக மசாஜ் செய்த பின்னர், தலைமுடியை நன்றாக நீரில் அலச வேண்டும்.
Home »
பெண்கள் உலகம்
» பொடுகை விரட்டும் இயற்கை முறைகள்
பொடுகை விரட்டும் இயற்கை முறைகள்
Posted by suj
Posted on 8:34 PM
with No comments
0 comments:
Post a Comment