
அலுவலகம் செல்லும் பெண்களில் பலர் இதில் உறுப்பினராகி உள்ளனர். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும், வெளியே தெரியாமல் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. இதனால் பெண்களின் தனிப்பட்ட நலன் பாதுகாக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு இருக்கிறது என்ற எண்ணம் அவர்களை ஆறுதலடைய வைக்கிறது. அலுவலகம் செல்லும் பெண்கள் அலுவலக பிரச்சினைகளுக்கிடையே வேறுமாதிரியான போராட்டங்களையும் எதிர் கொள்ளும்போது மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அத்தகைய பாதிப்புகளை இந்த சங்கம் வெகுவாக குறைக்கிறது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு பெரும்பாலும் பணப்பிரச்சினை இருக்காது. சுதந்திரமாக வாழலாம். உலக ஞானமும் அவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்பதெல்லாம் உண்மைதான்.
ஆனால் அளவுக்கு அதிகமான வேலைப்பளு, மேலதிகாரிகளின் தொந்தரவு, சக ஊழியர்களின் எதிர்மறை போக்கு மற்றும் வேறு பல தொந்தரவுகள் அவர்களை நிம்மதி இழக்கச் செய்கிறது. அதனால் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலதிகாரி எப்படிப்பட்டவராக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டியது அவருக்கு கீழ் பணியாற்றும் ஊழியரின் கடமை. அதனைப் பயன்படுத்தி அவர்கள் அத்துமீற நினைத்தால், அது பெண் ஊழியரின் மனதில் வேண்டாத பயத்தையும்- பதற்றத்தையும் உருவாக்கி விடும். அதை பல பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட விஷயங்களுக்கு தீர்வுகாண ‘அலுவலகம் செல்லும் பெண்களின் சங்கம்’ பெரிதும் உதவுகிறது. ‘தைரியமும், துணிச்சலுடன் சமயோசித புத்தியும் இருந்தால் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக தேவையில்லை. அதிகாரியையும் சமாளித்து வேலையையும் காப்பாற்றிக் கொள்ளலாம்’ என்பதை வலியுறுத்துகிறது, அந்த சங்கம்.
பிரச்சினைகளை தீர்க்க நேருக்கு நேர் மோத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அலுவலகம் செல்லும் பெண்கள் எல்லோரிடத்திலும் இனிமையாக பேச பழகிக்கொள்ளவேண்டும். ஒரு சிலர் தவறான எண்ணத்தில் பழகுவார்கள். அதனை சமயோசிதமாக புரிந்துகொண்டு விலகிக் கொள்ளவேண்டும்.
கூடுமானவரை குடும்பப் பிரச்சினைகளை அலுவலகத்தில் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். அது அந்த பெண்களை இப்படி சமயோசிதமாக செயல்பட்டால் சில பிரச்சினைகளை சமாளிக்க பாதிப்பதோடு வீட்டிலுள்ளவர்களையும் பாதிக்கும்.
பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள தைரியம் தேவை. சமயோசித புத்தியும், பாதுகாப்பு உணர்வும் எப்போதும் அவர்களிடம் இருக்கவேண்டும். பெண்கள் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் விழிப்போடு எப்போதும் இருக்க வேண்டும். தனிமையில் யாருடனும் பணிபுரியக்கூடாது.
வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்தால் செல்போனை சார்ஜ் செய்து எடுத்துச் செல்லவேண்டும். தான் இருக்கும் இடம், சூழல் பற்றியும் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். பெண்கள் பணிபுரியும் அலுவலகங்கள் பலத் தரப்பட்ட மனிதர்களால் சூழப்பட்ட இடம். அங்கு யாரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது. தேவைக்கு நம்பாமலும் இருக்கக்கூடாது.
0 comments:
Post a Comment