
உலகில் 20 சதவீத மக்கள் இது போன்ற அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு உடனடி மருத்துவத்தால் சரியாக கூடிய இது சிலருக்கு பல வருடங்கள்கூட அவ்வப்போது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆஸ்துமா கூட ‘அலர்ஜி’தான்.
அலர்ஜிக்கான சில காரணங்கள்
* உணவு * உட்கொள்ளும் மருந்து வகைகள் * கிருமிதாக்குதல், பூச்சிக்கடி * சுற்றுப்புற சூழல் * டென்ஷன் * அதிக வெப்பம் * தண்ணீர் மாறுதல், சுகாதாரமின்மை இதில் உணவு அலர்ஜி என்பது மீன், கொட்டை வகைகள், முட்டை, கோதுமை, சோயா போன்றவற்றால் ஏற்படுபவை.
பலருக்கு வேர்க்கடலையால் கூட அலர்ஜி ஏற்படுவது உண்டு. உணவில் உள்ள புரதமே இந்த அலர்ஜிக்கு காரணமாகிறது. சரும பாதிப்பு, குடலில் பாதிப்பு, மூச்சு திணறல் பாதிப்பு என இது சாதாரண பாதிப்பில் இருந்து சற்று கடினமாக கூட முடிவதும் உண்டு. அதிர்ச்சி (ஷாக்) என்ற நிலைமைக்கு கொண்டு சென்று இறப்பை கூட ஏற்படுத்தி விடும்.
ஆகவே, இவற்றுக்கு உடனடி மருத்துவம் தேவை. மேலும், சிலருக்கு மூக்கில் நீர் வடிதல், விடாத தும்மல், கண்ணில் நீர் கசிவு, கண்ணில் சிவப்பு, எக்ஸிமா, ஆஸ்துமா என்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அலர்ஜியின் வெளிப்பாடுகள்
* சருமபாதிப்பு, * தலைவலி, * வாய், உதடு, நாக்கு, தொண்டை, கண் போன்ற பலபாகங்களில் தாங்க முடியா அரிப்பு, * முகவீக்கம், உதடுவீக்கம், * குரலில் தடிப்பு, * மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், * விழுங்க முடியாமை, * வயிற்றுப் பிரட்டல், வாந்தி, * வயிற்றுப்பிடிப்பு, வலி, * மயக்கம், * அதிர்ச்சி (ஷாக்), * இறப்பு கடுமையான ஆஸ்துமா, கடுமையான மூச்சு திணறல், ரத்த அழுத்த குறைவு போன்றவை அவசர சிகிச்சை இல்லாவிடில் இறப்பில் கூட கொண்டு விட்டு விடும்.
அலர்ஜி என்பது ஒரு சில நிமிடங்களிலோ அல்லது பல மணி நேரம் கழித்தோ வெளிப்படுவது உண்டு. சிலருக்கு மது அருந்தும் போது தலைவலி வரும். மசாலா உணவு மூக்கில் நீர் வரவழைக்கும். டீ, பால் உணவுகள் சிலருக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.
இவற்றை அலர்ஜி வகையில் சேர்க்கா விட்டாலும், இந்த வகை உணவுகள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று ஒதுக்கி விடுவது நல்லது.
0 comments:
Post a Comment