• home
Home » » சோர்வு இன்றி உடல் பருமனை குறைக்கும் ஆசனங்கள்

சோர்வு இன்றி உடல் பருமனை குறைக்கும் ஆசனங்கள்


சோர்வு இன்றி உடல் பருமனை குறைக்கும் ஆசனங்கள்உடல் எடையை குறைக்க நவீன மருந்துகள் மார்க்கெட்டில் உலா வருகின்றன. நாங்கள் கொடுக்கும் மருந்துகளை சாப்பிட்டால் 6 மாதத்தில் பாதி அளவுக்கு உடல் எடை குறையும் என்று கூறுவார்கள். சாப்பாட்டை குறைத்தால் எடை குறைந்துவிடும் என்று சிலர் ஆலோசனை வழங்குவார்கள். அப்படி செய்தால் உடல் எடை மட்டும் குறையாது, பலமும் குறைந்துவிடும். ஆனால், மருந்து மாத்திரைகளுக்கு அதிகமாக செலவிடுவதைவிட... சாப்பாட்டை குறைப்பதைவிட... யோகாசனப் பயிற்சியால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று யோகா வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும். யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும்.

குறிப்பாக உடம்பை சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் யோகா முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. உடல் அமைப்பை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியில் கொழுப்பு சேர்ந்து பருமன் ஏற்படும். 

இந்த கொழுப்பைக் குறைத்து உடலை கட்டுக்கோப்பில் வைப்பதற்கு அடிப்படை யோகாசனங்களுடன், பிரணாயாமம், உத்தன்பாத சக்ராசனம், சர்வாங்காசனம், ஹலாசனம், ஆகர்ன தனுராசனம், அஸ்த்ராசனம், திரிகோணாசனம், வீராசனம் உள்ளிட்ட சில யோகாசனங்கள் உள்ளன. இதனை முறைப்படி பயின்று, சீரான முறையில் செய்தால் உடல் முழுவதும் ஒரே சீராகும். உணவைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாசனத்தில் இருக்காது.

0 comments:

Post a Comment