Home »
பெண்கள் உலகம்
» அழகை அதிகரிக்க வேண்டுமா?
அழகை அதிகரிக்க வேண்டுமா?
Posted by Unknown
Posted on 2:45 AM
with No comments
அழகை அதிகரிக்க வேண்டுமென்று பலர் நிறைய பணம் செலவழிப்பதுண்டு. ஆனால் அப்படி பணத்தை செலவழித்தும் தற்காலிகமாகத் தான் அழகை அதிகரித்து வெளிப்படுத்த முடிகிறதே தவிர, நிரந்தரமாக அழகானது அதிகரித்து வெளிப்படுவதில்லை. மேலும் இப்படி தற்காலிக அழகானது மேக் அப் மூலம் தான் வருகிறது. இத்தகைய மேக் அப் மட்டும் இல்லாமல் இருந்தால், அவர்களைப் பார்க்கவே பயமாக இருக்கும். ஏனெனில் அந்த அளவில் மேக் அப் போட்டு முகத்தின் இயற்கை அழகையே பலர் கெடுத்து வைத்துள்ளனர். மேலும் மேக் அப் மூலம் சருமத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளனர். பொதுவாக இந்தியப் பெண்களின் சிறப்பே மேக் அப் இல்லாமலும் அழகாக காணப்படுவது தான். ஆனால் தற்போதோ மேக் அப் இல்லாமல் பார்க்கவே முடிவதில்லை. சரி, உங்கள் இயற்கை அழகை மீண்டும் பெற வேண்டுமா? அப்படியானால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் நீங்கள் மேக் அப் மூலம் இழந்த இயற்கை அழகை மீண்டும் பெறலாம். ஃபேஸ் பேக் வறட்சியான சருமம் உள்ளவர்களா? அப்படியானால் இந்த ஃபேஸ் மாஸ்க் போடுங்கள். அதற்கு 1/2 கப் ஓட்ஸ் பவுடர், 2 டேபிள் ஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, பின் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பிம்பிளைப் போக்க… முகத்தில் உள்ள பிம்பிளைப் போக்க, இரவில் படுக்கும் முன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, பிம்பிள் உள்ள பகுதியில் தடவி, ஒரு சுத்தமான துணியால் மூடி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து கழுவினால், பிம்பிள் நாளடைவில் மறைந்துவிடும். கரும்புள்ளியைப் போக்க… அழகைக் கெடுப்பதில் பருக்களுக்கு பின்னர் கரும்புள்ளிகள் தான் முதன்மையாக உள்ளன. இத்தகைய கரும்புள்ளியைப் போக்க, எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதனை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இயற்கை மாய்ஸ்சுரைசர் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க கண்ட கண்ட கெமிக்கல் கலந்த மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்ததாமல், தினமும் காய்கறி எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இறந்த செல்களை நீக்க… சருமத்தில் தங்கியுள்ள இறந்த செல்களை நீக்க, பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். நேச்சுரல் ஸ்பா அழகு என்பது முகத்தில் மட்டுமின்றி, உடல் முழுவதும் தான். ஆகவே வாரம் ஒரு முறை ஸ்பாவில் செய்யக்கூடியவற்றை, வீட்டிலேயே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி செய்ய வேண்டும். அதற்கு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 கப் ஓட்ஸ் பவுடர், 1 கப் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் காய்கறி எண்ணெய் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் வென்னிலா எசன்ஸ் ஊற்றி 5 நிமிடம் கழித்து, அதில் 1/2-1 மணிநேரம் வரை உட்கார்ந்து வர வேண்டும். அழகான சிரிப்புக்கு… அழகில் சிரிப்பும் முக்கிய பங்கினைப் பெறுவதால், பற்களை நன்கு பளிச்சென்று வைத்துக் கொள்வது இன்றியமையாததாகிறது. எனவே தினமும் இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும். மேலும் பற்களில் கறையை உண்டாக்கும் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மென்மையான சருமத்தைப் பெற… சருமம் மென்மையாக வேண்மானால், அதனை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். சுருக்கங்களைப் போக்க… முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்களை சருமத்தில் இருந்து போக்க, விளக்கெண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வரை வேண்டும். அதிலும் இதனை தினமும் தவறாமல் செய்து வந்தால், சரும சுருக்கங்களைப் போக்கலாம். ஆரோக்கியமான சருமத்தைப் பெற… சருமம் ஆரோக்கியமாக காணப்பட வேண்டுமானால், சருமத்திற்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. ஆகவே சருமத்திற்கு அவ்வப்போது புரோட்டீன் மாஸ்க் போட வேண்டும். அதற்கு 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 5-6 பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை மென்மையாக அரைத்து, முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க… உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அந்த துண்டைக் கொண்டு சருமத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், தழும்புகள் போன்றவை வெளியேறி சருமம் பொலிவோடு பிரகாசமாக காணப்படும். நேச்சுரல் சன் ஸ்க்ரீன் லோசன் சருமத்தின் நிறம் மாறாமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய் சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, வெளியே செல்லும் ஒரு மணிநேரத்திற்கு முன் சருமத்தில் தடவி ஊற வைத்து சென்றால், சருமத்தில் சூரியக் கதிர்களால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். அழகான சருமத்தைப் பெற… தேங்காய் பாலைக் கொண்டு தினமும் சருமம் மற்றும் உதடுகளை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் ஊட்டச்சத்துக்களானது அதிகரிக்கப்பட்டு, சருமம் அழகாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும். உடலுக்கான ஸ்கரப்… அழகாக இருக்க வேண்டுமென்று முகச் சருமத்தை மட்டும் பராமரிக்காமல், உடல் முழுவதும் சரியான பராமரிப்பு கொடுத்தால் தான் உண்மையான அழகு உள்ளது. ஆகவே ஆலிவ் ஆயில் மற்றும் உப்பை ஒன்றாக கலந்து, அதனை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் குளித்தால், சருமத்தில் தங்கியுள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் அழகாக இருக்கும். ஷேவிங் செய்யும் போது… கால்களில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகளை நீக்க ஷேவிங் க்ரீம் அல்லது சோப்பு பயன்படுத்தாமல், ஷேவிங் செய்யும் முன் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பின் ஷேவிங் செய்தால், கால்கள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.
0 comments:
Post a Comment