கர்ப்ப காலத்தில் எதை செய்தாலும் சாப்பிட்டாலும் தாய்க்கும், சேய்க்கும் பொருந்தும் உணவாக தான் சாப்பிட வேண்டும் என்பதை நாம் மறுக்க முடியாது. எள்ளால் செய்யப்படும் எண்ணெயில் இரும்புச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற கர்ப்பிணிகளுக்கு தேவையான நிறைய பொருட்கள் இருக்கின்றன.
இதில் அதிகம் உள்ளது. ஆனால் இதை உண்பதன் மூலம் கரு கலைந்து விடுதல் மற்றும் இதர பிரச்சனைகள் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகின்றது என்ற ஒரு தவல்களும் பரவலாக உண்டு. எந்த வித ஒவ்வாமை இருப்பவர்களும் அல்லது குறை பிரசவத்தை அனுபவித்தவர்களும் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
நல்லெண்ணெயின் செயல்கள் கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியத்தை சார்ந்தே வெளிப்படும். அது மட்டுமல்லாமல் கர்ப்பிணிகள் அதை உண்ணும் அளவை சார்ந்தும் அமைகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லெண்ணெய் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதை பார்க்கலாம்.
நல்லெண்ணெயால் செய்யப்பட்ட உணவுகளை மிக முக்கியமாக கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். சல்ஃபர் மற்றும் பாலி-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பை உடைய இந்த எண்ணெய் ஒவ்வாமையை ஏற்படுத்த கூடியது.
குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, அவர்கள் இதை சாப்பிடுவது நல்லதல்ல. ஆகையால் ஒரு வேளை உங்களுக்கு ஒவ்வாமை இருந்தாலும் இதை நிச்சயம் சாப்பிடக் கூடாது. ஆயுர்வேதத்தின் படி நல்லெண்ணெய் சூட்டை விளைவிக்கும் உணவாகக் கருதப்படுகின்றது.
உடம்பின் வெப்பத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் குழந்தை வளர்ச்சியையும் இது பாதிக்கிறது. ஆகையால் கர்ப்ப காலங்களில் நல்லெண்ணெயை சாப்பிடுவது சரியன்று. நல்லெண்ணெய் சாப்பிட்டு சுரப்பிகளால் தூண்டப்பட்டால் பெண்களுக்கு கருப்பை வாய் திறப்பு ஏற்படலாம்.
பெண்கள் ஒரு வேளை கர்ப்பமாக இருந்தால் இது தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும். ஆகையால் கர்ப்பிணிகளுக்கு இது தீங்கு விளைவிக்கக் கூடிய எண்ணைய் தான். அதிக அளவு இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவைகளை உடைய நல்லெண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் பி ஆகியவை உள்ளன.
இவை கர்ப்பிணி பெண்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துப் பொருட்களாக உள்ளன. கர்ப்ப காலத்தில் ஒரு வேளை இரத்தப்போக்கு ஏற்பட்டால் அதை நிறுத்துவதற்கு இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
ஆகையால் சரியான அளவு இந்த எண்ணெயை பயன்படுத்துவது உடலுக்கு நன்மை விளைவிக்கும். பொதுவாக கர்ப்ப காலத்தில் சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். எள் எண்ணெயில் அதிக நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் கர்ப்ப காலத்தில் நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வது சரியே! ஆனால் தேவையான அளவை எடுத்துக் கொள்வதில் கவனமாய் இருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment