• home
Home » » மருந்துகளின் செயல் திறனை கூட்டிக் குறைக்கும் உணவுகள்

மருந்துகளின் செயல் திறனை கூட்டிக் குறைக்கும் உணவுகள்


உணவு வகைகள் சிலவும், தேனீர், கோப்பி, மதுபானம் போன்ற பானங்களும் மருந்து வகைகளின் செயற்பாட்டை அதிகரிக்க அல்லது வலிமையை இழக்கச் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. பழச்சாறுகள், தேனீர், கோப்பி வகை, பால், பாலுணவு வகை, மதுபான வகை என்பன மருந்து வகைகளின் உடல் ஏற்கும் தாக்கத்தைத் தடுப்பதாக பேசப்படுகிறது.
உதாரணமாக இஞ்சியில் காணப்படும் ஜின்ஜரேல் (Gingerole) எனப்படும் பதார்த்தமானது, மசில்ஸ் இனது உயிரணுக்களின் மையப் பகுதிக்கு சக்கரையை, இன்சுலின் உதவியின்றி அனுப்பும் புரதத்தை உடலில் அதிகரிக்கச் செய்வதால், இன்சுலின் ஓமோனை வெளியிலிருந்து பெறும் நோயாளிகள் இஞ்சி சாப்பிடும் சமயங்களில், இன்சுலின் அளவைக் கவனித்துக் குறைத்துக் கொள்ள வேண்டியதாகவுள்ளது.
துறம்போஸிஸ் (thrombosis) எனப்படும் உடல் உறுப்பில் இரத்தம் கட்டியாகி உறைவதையும், இருதயத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் இரத்தம் உறைவதையும் தடுப்பதற்கு மருந்து வகைகளை உபயோகிப்பவர்கள், அதிகளவில் கோவா, அவரைவகை, தக்காளி, பருப்பு, கீரை, வகைகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் காணப்படும் வைட்டமின் ‘கே’ (Vitamine K) இரத்தம் கட்டியாகும் தன்மையை முறைப்படுத்தும் தன்மை கொண்டது.
உடலில் இரத்தம் கடுமையாகக் கட்டிபடும் தன்மையைக் குறைக்கப் பாவிக்கப்படும் மருந்தின் தன்மையை அது நடுநிலைப்படுத்த முயலுமெனப் பேசப்படுகிறது. இரத்தப் பெருக்கு ஏற்படும் பெண்களுக்கு வைட்டமின் கே அதிகமாக்க் காணப்படும் உணவுவகைளைத் தருவதும், காய்ந்த ஒரு சில குறிப்பிட்ட இலைகளை அவித்துக் குளிக்க வார்ப்பதும், வைட்டமின் ‘கே’ இன் சக்தியால் இரத்தப்போக்கை நிதானப்படுத்தும் அறிவியற் தந்திரமாகும்.
உணவு வகைகளானது, மருந்து வகைகளின் தாக்கத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் துணை போவதை அறிந்த சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் பத்தியம் காக்கும் முறைமை கையாளப்பட்டமை கவனிக்க வேண்டிய அறிவியலாகும்.
பத்திய முறையானது, மருந்து உண்ணத் தொடங்குவதற்கு சற்று முன்பே ஆரம்பித்து, மருந்து உண்பது நிறுத்தப்பட்ட சில காலத்தின் பின்வரை தொடர வேண்டியது சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் கையாளப்பட்ட தந்திரமாகும் பத்தியம் என்பது அருந்தும் மருந்து வகைகளுக்குத் தக்கவாறு, உண்ண வேண்டிய உணவு எனப் பொருள் தரும்.

0 comments:

Post a Comment