வெயில் காலத்தில் நமது உடலில் அதிக வியர்வை வெளியேறும். அதிலிருந்து தப்பிக்க நாம் தினமும் இருவேளை குளிக்க வேண்டியதிருக்கும். அப்போது அடிக்கடி சோப்புகளை பயன்படுத்தினால் சருமம் பொலிவிழந்து விட வாய்ப்பிருக்கிறது. சோப்புகளை அடிக்கடி பயன்படுத்தாமல் மூலிகை பொடியை நாம் தயார் செய்து வைத்துக்கொண்டு உபயோகப்படுத்தினால் சரும அழகை பாதுகாக்கலாம்.
மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை இதோ:
பச்சைப் பயிறு - 250 கிராம்
கடலை பருப்பு 250 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
பூலாங்கிழங்கு 250 கிராம்
ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம்
ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.
பாசிப் பயறு 250 கிராம்
கடலைப் பருப்பு 250 கிராம்
கார்போக அரிசி 250 கிராம்
இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சில துளி தேனைக் கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும்.
வெளியில் அடிக்கடி செல்லும் பெண்களின் முகம் கறுத்து விடும். அப்படிப்பட்ட பெண்கள் இரவில் கோல்டு கிரீமையும், பகலில் வானிஷிங் கிரீமையும் தடவி வந்தால் தோலின் நிறம் மங்காது, கறுக்காது. வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை.
தேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும். தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும்.
வசதி உள்ள பெண்கள் பாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.
Home »
பெண்கள் உலகம்
» சரும அழகை பாதுகாக்கும் இயற்கை மூலிகை பொடி
சரும அழகை பாதுகாக்கும் இயற்கை மூலிகை பொடி
Posted by suj
Posted on 8:30 PM
with No comments
0 comments:
Post a Comment