செய்முறை: விரிப்பில் குப்புறப் படுத்து, முதலில் வலது காலை முழங்கால் அளவு பின்னால் மடக்கவும். பின்னர் வலதுகையை பின்னால் கொண்டு சென்று, வலது கணுக்காலை பிடித்துக்கொள்ள வேண்டும். இடது கையை தலைக்கு நேரே நீட்ட வேண்டும். பின்னர் வலது காலை உயர்த்தி, கை, தோள்பட்டை, தலை, மார்பு ஆகியவை பூமிக்கு மேலே இருக்கும்படி உள்நோக்கி இழுக்கவும். அதேசமயம் இயல்பான சுவாசத்தில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு கை, கால்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும். இதேபோல் இடது காலை முழங்கால்வரை மடக்கி, இடதுகையால் கணுக்காலை பிடித்து முன்புபோல மேலே தூக்கி தனுராசன நிலையில் நிறுத்த வேண்டும்.
பயன்கள்: குண்டான நபர்களுக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதுகு தண்டு இளக்கம் பெறும். தோள்பட்டை நெகிழ்வுத்தன்மை பெறும். மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள், வாயுக் கோளாறுகள், முதுகு தண்டுவலி ஆகிய நோய்கள் நீங்கும்.
முன்னெச்சரிக்கைகள்:
மிகவும் சவாலான யோகாசனங்களில் தனுராசனமும் ஒன்று. இது அனைவரும் செய்யக்கூடிய பயிற்சி. இதனை தவறாக செய்தால் முதுகு மற்றும் முழங்கால் தொடர்பான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே, இந்த வகை ஆசனங்களை யோகா ஆசிரியரின் அறிவுரைகளின் படி செய்வது அவசியம்.


0 comments:
Post a Comment