• home
Home » » பாசிப்பயிறு மசியல்

பாசிப்பயிறு மசியல்


பாசிப்பயிறு மசியல்தேவையான பொருட்கள் : 

பாசி பயிறு -  1 கப் 
தக்காளி - 2 
வெங்காயம் - 2 
ப.மிளகாய் - 4 
மஞ்சள் தூள் - சிறிதளவு 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு 
கடுகு, சீரகம் - தாளிக்க 

செய்முறை : 

• பாசி பயிறை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். 

• தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கவும். 

• குக்கரில் வெங்காயம், தக்காளி, பாசி பயிறு, ப.மிளகாய், மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் சேர்த்து 5 விசில் வைத்து வேக வைத்து எடுத்து உப்பு சேர்த்து மசித்து கொள்ளவும் 

•  கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்து பாசிபயிறு கடைசலை கொட்டவும். 

• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

0 comments:

Post a Comment