எச்.ஐ.வி. நோயாளியுடன் மற்றவர்கள் தங்கி இருக்க அச்சப்படுவதற்கு பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள். எச்.ஐ.வி. நோயாளி பயன்படுத்தும் கழிவறை, ஆடைகள், சாப்பாடு போன்றவற்றை மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் போது, அவர்களுக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுமோ? என்று அஞ்சுவது தான் இதற்கு காரணம். ஆனால் அவ்வாறு அஞ்சப்பட தேவையில்லை என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். எச்.ஐ.வி. நோயாளியுடன் முத்தமிட்டு கொண்டாலும் பாதிப்பு ஏற்படாது. ஆனால் எச்.ஐ.வி. நோயாளிக்கும், அவரை முத்தமிடுபவருக்கும் வாயில் புண் இருந்து, அதில் ரத்தக்கசிவு இருந்தால் எச்.ஐ.வி. தொற்று பரவ வாய்ப்பு உண்டு.
எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களின் ஆடைகளை துவைக்காமல் மற்றவர் அணிவதால் தொற்று பரவாது. ஆனால் அவரது உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டு ரத்தமோ, நீரோ வழிந்து அந்த ஈரம் காய்வதற்குள் மற்றவர் அந்த சட்டையை அணிந்து அவருக்கும் திறந்த நிலையில் புண் இருந்து இதன்
மீது எச்.ஐ.வி. நோயாளியின் ரத்தம் அல்லது நீர் பட்டுவிட்டால் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. அது போன்ற சூழ்நிலைகள் இல்லாதபட்சத்தில் எச்.ஐ.வி. நோயாளியின் சட்டையை மற்றவர் அணிவதால் பாதிப்பு இல்லை.


0 comments:
Post a Comment