
அதே போல், நிறைய நகையோ அல்லது பணமோ கொண்டு செல்வதும் நல்லதல்ல. இவ்வளவையும் மீறி உங்களுக்கு ஆபத்து நேர்ந்தால். .. உங்களை யாராவது மிரட்டினாலோ, உடமைகளை பறிக்க முற்பட்டாலோ, அல்லது பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டாலோ, நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
ஓர் ஆணின் மென்மையான பகுதிகள் தொண்டை, மூக்கு, கண்கள், நடு மார்பு பகுதி, விதைப்பை, கைகளில் உள்ள சுட்டுவிரல் ஆகும். உங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் அந்நபரின் மேற்கூறிய மென்மையான பகுதிகளில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ உங்களால் முடிந்த அளவுக்கு கைகளாலோ அல்லது கால்களாலோ பலமாக தாக்குங்கள்.
இதற்காக கராத்தே குங்பூ போன்ற தற்காப்பு கலைகள் தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை. உங்களது முழுபலத்தையும் காட்டுங்கள். உங்களது தாக்குதலுக்கு உட்பட்ட நபர் நிலைதடுமாறி கீழே விழும்பட்சத்தில், அல்லது மயக்கமுறும் பட்சத்திலோ அந்த இடத்தைவிட்டு நீங்கள் விரைவாக சென்று விடுங்கள்.
விலாசம் கேட்பதிலும் கவனம் தேவை! நீங்கள் போகவேண்டிய வீடு அல்லது அலுவலகத்தின் விலாசம் உங்களுக்கு தெரியவில்லை என்றால், அவ்விலாசத்தை அப்பகுதியில் இருக்கும் யாரிடமாவதுகேட்டு தெரிந்துகொள்ள முயல்வோம்.
அப்படி நாம் கேட்க கூடிய நபரின் தோற்றம் வைத்து அந்நபரிடம் கேட்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும். முதலில் அப்பகுதியை உங்கள் கண்களால் நோட்டமிடுங்கள். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
மூணு சீட்டு ஆடும் நபர்களிடமோ, குடி போதையில் தள்ளாடும் நபரிடமோ, வேறு விதமாக காட்சியளிக்கும் சமூக விரோத மனிதர்களிடம் நெருங்கவே நெருங்காதீர்கள்.
0 comments:
Post a Comment