• home
Home » » மசாலா சீயம்

மசாலா சீயம்

என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 ஆழாக்கு,
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 ஆழாக்கு,
உப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
துருவிய தேங்காய் - 1 மூடி,
தோலுரித்துப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 20,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2.

எப்படிச் செய்வது?

பச்சரிசி, உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். அத்துடன் உப்புச் சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும். கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி மாவில் போட்டு நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் சுட வைத்துப் பொரித்தெடுக்கவும். கதம்பச் சட்னியுடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment