• home
Home » » கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை முழுமையான சிகிச்சைகள்

கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை முழுமையான சிகிச்சைகள்

கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை முழுமையான சிகிச்சைகள்தம்பதியர் அனைவரும் மழலைச் செல்வம் பெற வேண்டும் என்பதற்காக பலவிதமான நவீன மருத்துவ வசதிகளும் தொழில்நுட்பங்களும் ஆராய்ச்சிகளும் வந்து கொண்டிருப்பது தெரிந்ததே. இருந்தும் இவற்றை மீறி சில நேரங்களில் தோல்விகளும் ஏற்படத்தான் செய்கிறது. 

ஐவிஎஃப் என்ற சோதனைக்குழாய் கருத்தரிப்பில் தோல்வி, வாடகைத்தாய் பெறுவதில் சிரமம், விந்தணு இல்லாமையால் ஏற்படும் பிரச்சினை, கருக்கலைப்பு ஏற்படுவது போன்ற பல பிரச்சினைகள் இத்தோல்விகளுக்கு காரணமாக உள்ளது. 

இப்பிரச்சினைகளுக்கெல்லாம் சிறப்பான சிகிச்சை மற்றும் தீர்வளிப்பதும், சர்வதேச அளவில் சிறப்பான சிகிச்சை முறை மூலம் தனக்கென ஒரு முத்திரை பதித்திருப்பதும் வருங்காலத்தில் இத்துறையில் இந்தியர்களுக்கென ப்ரத்யேக சிகிச்சை முறைகளை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் பற்றியெல்லாம் விரிவாக கூறினார் டாக்டர் மஹாலஷ்மி சரவணன். 

ஐவிஎஃப் முறையில் முந்தைய முறைகளில் தோல்விடையந்தவர்களுக்கு அதற்கான சரியான காரணத்தை கண்டறிந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. முந்தைய சிகிச்சை முறை, முட்டை எப்படி உற்பத்தியானது, விந்தணு எப்படி இணைக்கப்பட்டது, கருவை கருப்பைக்கு மாற்றிய முறை, கருப்பையில் கரு ஒட்டாமல் போவது (ஆர்ஐஎஃப் என்ற ரெகரன்ட் இம்ப்ளான்ட் பெபிலியர்) போன்றவைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வை ஒவ்வொரு நோயாளிகளுக்கு ஏற்ப தீர்மானிக்கின்றனர். 

தோல்வியடையும் ஐவிஎஃப் முறைக்கு முக்கியமான ஒரு காரணம் மனைவியின் உடலின் எதிர்ப்பு சக்தி கணவரின் கருச்செல்லை நிராகரிப்பது ஆகும். இதற்காக கணவரின் ரத்தத்தில் இருந்து வெள்ளை அணுக்களை பிரித்தெடுத்து அதனை முறையாய் பதப்படுத்தி மனைவிக்கு செலுத்துகின்றனர். 

தடுப்பூசி போன்ற இம்முறையை (எச்எல்டி- ஹஸ்பென்ட் லூகோசைட் ட்ரான்ப்ளான்ட்) வாரம் ஒருமுறை என்று சில வாரங்கள் செய்யும் போது, இந்த கரு நிராகரிப்பு நடப்பதில்லை. அதே போல் இஆர்ஏ என்ற என்டோமெட்டியல் ரிசப்டிவிட்டி ஆரே என்ற முறை மூலம் பெண்ணின் கருப்பையின் உட்புற சுவர் தயார் நிலையில் இருக்கும் நிலையை சரியாய் கணித்து அந்த நேரத்தில் கருவை செலுத்தும் போதும் கரு நிராகரிப்பு நடப்பதில்லை. 

கரு நிராகரிப்பு தவிர சில பேருக்கு அடிக்கடி கருச்சிதைவு நடக்கும். இதற்கு தைராய்ட் பிரச்சினையோ, பேறுகால நீரிழிவு நோயோ, எதிர்ப்பு சக்தி பிரச்சினை மற்றும் கொயாகுலேஷன் (திரிந்து விடுதல்) பிரச்சினை போன்றவைகள் காரணமாக இருக்கும். இம்மாதிரி பிரச்சினைகளுக்கு சரியான சிகிச்சையை முதலில் அளிக்கப்படுகிறது. 

இதைத் தவிர கருப்பை வாய் தளர்ந்து இருப்பதால் கருச்சிதைவு ஏற்படலாம் என்ற நிலைக்கு கருப்பை வாயை தைத்தும் கருச்சிதைவை தடுக்கிறார்கள். உடலளவிலும், மனதளவிலும் பிரச்சினை உள்ள சில பெண்களுக்கு குழந்தையை சுமக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் தம்பதியர் இருவரின் விந்தணு மற்றும் கருமுட்டை நன்றாக இருக்கும். 

இந்நிலையில் குழந்தையை சுமந்து பெற்றெடுக்க வாடகைத்தாயை நாடுவர். நம்பகமான வாடகைத்தாய் மற்றும் நியாயமான செலவு போன்றவைகளை நாங்களை ஏற்பாடு செய்து பிரசவ காலம் முடியும் வரையில் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் மட்டுமின்றி தங்கும் வசதி உணவு வசதி போன்றவைகளை செய்து தருகிறோம். 

இதனால் பல வெளிநாட்டினர் (இதுவரை கிட்டத்தட்ட 14 நாட்டினர் சிகிச்சை பெற்றுள்ளனர்) எங்கள் மருத்துவமனையை நாடுகின்றனர் என்று கூறினார் டாக்டர் மஹாலஷ்மி. இன்றைக்கு பல நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மேற்கத்திய நாடுகளில் நடத்தப்படும் ஆராய்ச்சியின் விளைவாகவே நமக்கு கிடைக்கின்றன. 

இனி வருங்காலத்தில் நம் மக்களின் மரபியல் முறைகளுக்கு ஏற்ப சிகிச்சை முறைகளை இங்கேயே செய்யும் ஆராய்ச்சி மூலம் தகவல்களை பெற்று, நிரூபணம் செய்து, அதற்கான சிகிச்சை முறைகளை நம் மக்களுக்கு ஏற்ப வகுத்து திறம்பட செய்ய வேண்டும் என்பதே தங்களின் எதிர்காலத்திட்டம் என்றும் தெரிவித்தார் டாக்டர் மஹாலஷ்மி சரவணன்.

0 comments:

Post a Comment