• home
Home » » கூந்தல் வளர்ச்சிக்கு சப்போட்டா கொட்டை தைலம்

கூந்தல் வளர்ச்சிக்கு சப்போட்டா கொட்டை தைலம்

கூந்தல் வளர்ச்சிக்கு சப்போட்டா கொட்டை தைலம்கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதே... என்று கவலைப்படுகிறவர்களுக்கு கைகொடுக்கிறது சப்போட்டா கொட்டை தைலம்! 

ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன் ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். ஆறியதும் வடிகட்டுங்கள். இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து, தலையில் தேய்த்து, அரைமணி நேரம் ஊறவிடுங்கள். 

பிறகு கடலைமாவு, சீயக்காய் தேய்த்து குளியுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி குளித்து வந்தால், ஒரே மாதத்தில் தலை மேல் பலன் கிடைக்கும். கண்டிஷனராகவும் கலக்குகிறது சப்போட்டா, காயவைத்த சப்போட்டா தோல் 100 கிராம், சப்போட்டா கொட்டை 50 கிராம். இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். 

இதனுடன் கொட்டை எடுத்த புங்கங்காய் 100 கிராம், கொட்டை எடுத்த கடுக்காய் 10 கிராம், உலர்ந்த செம்பருத்தி பூ 50 கிராம், வெந்தயம் 100 கிராம், என எல்லாவற்றையும் சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். 

வாரம் ஒரு முறை, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்க்கு பதிலாக இந்தப் பவுடரை தேய்த்துக் குளித்தால், நுனி பிளவு குறைவதுடன், முடியின் வறட்டுத்தன்மை நீங்கி, பளபளப்பு கூடும். 

0 comments:

Post a Comment