• home
Home » » பெண்களே சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்

பெண்களே சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்

தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமாணத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையான திகழும் பெண்களின் பாதுகாப்பு இன்னமும் இந்தியாவில் கேள்வி குறியாகவே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது தவறு. 

பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்துகொள்ள சில விஷயங்களை பின்பற்றலாம். 

1. தனியாக பயணம் செய்யும்போது, அந்த இடத்தின் சுற்றுபுறத்தில் ஏதாவது தப்பாக இருப்பதுபோல் தெரிந்தால் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுங்கள். 

2. ஈவ் டீசிங்கி‌ல் இருந்து காத்துக்கொள்ள தைரியமாக எச்சரியுங்கள், அதை மீறியும் கேலி கிண்டல் தொடர்ந்தால் கூச்சபடாமல் அருகிலிருப்பவர்களை உதவிக்கு அழையுங்கள். 

3. முடிந்தவரை இரவில் தனியாக பொது போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துவிடுங்கள். 

4. உங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்கும்போது, அந்நியர்களுக்கு லிப்ட் கொடுக்காதீர்கள். தனிமையான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டாம். வழக்கப்பட்ட வழியிலேயே செல்லுங்கள், புதிய வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம். 

5. உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள். 

6. தனியாக பயணிக்கும்போது செல்போனை கையில் வைக்காதீர்கள், ஒருவேளை யாரிடமாவது சிக்கிகொண்டால் முதலில் செல்போனைத்தான் உங்களிடமிருந்து பறிப்பார்கள். 

இவ்வாறான தற்காப்பு முறைகளை பயன்படுத்திதான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற அவல நிலை மாறும் வரை இந்திய பெண்கள் உஷாராக இருப்பது அவசியமாக உள்ளது.

0 comments:

Post a Comment