• home
Home » » கர்ப்ப காலத்தில் புகை பிடிக்கலாமா?

கர்ப்ப காலத்தில் புகை பிடிக்கலாமா?

கர்ப்ப காலத்தில் புகை பிடிக்கலாமா?கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், பெண்கள் தங்களை கவனமாக பார்த்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் இந்த நேரத்தில் தான் கருச்சிதைவுக்கான‌ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

அதுமட்டுமின்றி கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் அதிகபட்ச ஓய்வு எடுக்க வேண்டும். கர்ப்பத்தின் போது பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதால், அவை மிக கடினமான மாதங்கள் ஆகின்றன. 

கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கம் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதிலும் உட்கொள்ளும் சரியான ஊட்டச்சத்தும் மிகவும் முக்கியம். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் பெண் என்ன சாப்பிடுகிறாளோ அதுதான் குழந்தைக்கும் செல்லும். 

கர்ப்ப காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் உள்ளன. அதுவும் முதல் மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் எடை அதிகரிப்பதைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. 

கர்ப்பிணிப் பெண் புகைப்பதோ அல்லது மது அருந்துவதோ கூடாது. இந்த இர‌ண்டும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தானவை. ஒரு கர்ப்பிணிப் பெண் உட்கொள்ளும் மது குழந்தைக்கு செல்கிறது. அது குழந்தைக்கு கடுமையான சேதம் விளைவிக்கும். 

குறிப்பாக இதனால் குழந்தைக்குப் பிறப்பிலேயே குறைபாடுகள் ஏற்படலாம். கர்ப்பிணிகள் புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருக்க கூடாது. அந்த புகை கூட உங்களையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும் ஆபத்து உள்ளது. ஆகவே நன்கு விழிப்புடன் இருக்க வேண்டும். 

கர்ப்பிணிகளுக்கு குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை இருப்பது இயற்கை. இதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்ள கூடாது. அதற்கு பதிலாக இயற்கை தீர்வு பெற‌ முயற்சிக்க வேண்டும். அதிக நீர் உட்கொள்வது முக்கியம். தினமும் குறைந்தது ஆறு முதல் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்

0 comments:

Post a Comment