• home
Home » » உடல் நலம் பேண தேவை... சீரான உணவு பழக்கம்

உடல் நலம் பேண தேவை... சீரான உணவு பழக்கம்

உடல் நலம் பேண தேவை... சீரான உணவு பழக்கம்உணவு பழக்கத்தில் அநேகருக்கு இந்தப் பிரச்சினை இருக்கின்றது. ஒரேடியாக கொல பட்டினி கிடப்பது, டீ, காபி அல்லது ஏதோ ஒன்றை குடித்து பொழுதை கழிப்பது என உணவையே ஒதுக்குபவர் பலர். இவர்கள் ஒரு ரகம். 

இதில் உடல் இளைத்து தெரிய வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவியர் இதனை கையாண்டு அதன் விளைவாக துடிக்கும் வயிற்று வலியில் உடம்பு சக்திழந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுவது நிறையவே நிகழ்கின்றது. 

மற்றொரு ரகம் எவ்வளவு உணவு கிடைத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் பீமர்கள். ஏதாவது ஒன்றினை கொரித்துக் கொண்டே இருப்பவர். அதிலும் பெண்கள் அரிசி, தேங்காய், பொட்டு கடலை எனவும், வெளியில் செல்லும் ஆண்கள் பஜ்ஜி, போண்டா, வடை எனவும் மற்றும் சிலர் அரிசி பொரி, வேர்கடலை என எப்போதும் வாயை மென்று கொண்டே இருப்பர்.

பாஸ்ட்புட், பீட்சா, பர்கர், அசைவம் என சாப்பிட்டே காலம் கழிக்கும் இளைய சமுதாயம் இதில் அடக்கம். சிலர் கட்டுப்பாடு இல்லாமல் உண்பர். ஆனால் இவர்கள் எடை குறைந்தோ அல்லது கூடியோ காணப்பட மாட்டார்கள். காரணம் இவர்கள் சாப்பிட்டவுடன் விரலை வாயில் விட்டு வாந்தி எடுத்து விடுவர். 

இல்லையெனில் இளைக்கும் மருந்து சாப்பிடுவர். உண்டால் எடை கூடி விடும் என்ற பயத்தில் வாழ்பவர்கள் நோயாளி ஆகின்றனர். விடாது சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்கள் எடை கூடி வெளியில் வர வெட்கப்பட்டு இன்னமும் உண்பதால் எடை கூடி மன உளைச்சல் அதிகமாக நோயாளி ஆகின்றனர். 

உண்பதை வாந்தி எடுத்து மீண்டும் உண்பவரும் ஒரு கால கட்டத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சிக்கி நோயாளி ஆகி விடுகின்றனர். ஏன் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். எல்லா மக்களுமே மனதளவில் பாதிக்கப்பட்டே உள்ளனர். அது 5 சதவீதமா? அல்லது 50 சதவீதமா? என்பதை அவர்கள் வாழ்க்கை முறையே தீர்மானிக்கின்றது. 

மனதளவில் அதிகம் பாதிக்கப்படும்போது ஆண்கள் குடி, சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். பெண்கள் அதிக உணவு உட்கொள்கின்றனர் என்று ஆய்வு கூறுகின்றது. 

மேற்கூறிய பிரச்சினைகள் உங்களைச் சார்ந்தவர்களுக்கு இருந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தனக்கு இதற்கான உதவி கிடைக்கின்றது என்று தெரிந்தாலே பாதிக்கப்பட்டவர் மிகவும் நிம்மதி அடைந்து தன் பிரச்சினை தீர்த்துக் கொள்ள முயற்சி எடுப்பார். 

* உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவரை குறை கூறி மேலும் மன நோயாளி ஆக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். 

* கண்டிப்பாக மனநல மருத்துவர், சத்துணவு நிபுணர், மருத்துவர் மற்றும் ஆலோசகர் இவர்களின் உதவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பதனை உணருங்கள். 

* ஆக்கப்பூர்வமான வார்த்தைகளும், ஊக்குவிப்புமே இத்தகையோரை சரி செய்ய உதவும்.

0 comments:

Post a Comment