• home
Home » » பெண்கள் கைப்பையில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியவை

பெண்கள் கைப்பையில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியவை

பெண்கள் கைப்பையில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியவைஉங்கள் கைப்பை பணம் மற்றும் சாவியை மட்டும் வைக்கும் இடம் என்பதைத் தாண்டி நீங்கள் பயன்படுத்தும் வாழ்க்கையின் அடிப்படை விஷயமாகி விடுகிறது. உங்களுடைய கைப்பையில் கட்டிப்பாக வைத்திருக்க வேண்டிய சில பொருட்கள் உள்ளதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பொருட்கள் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ளும் வகையில் உங்களை ஊக்கப்படுத்தும்.  

இந்த அவசியமான சில பொருட்களுடன் உங்களுடைய கைப்பையை எப்பொழுதும் தயாராக வைத்திருங்கள். இதன் மூலம் பாதுகாப்பு உணர்வுடனும், வெளியே செல்லும் போது தைரியமாகவும் இருக்க முடியும். இப்போது அவை என்னவென்று பார்க்கலாம்.. 

* பெண்கள் வெளியில் செல்லும் வேளைகளில், அம்மாக்கள் கொடுத்தனுப்பும் 'பாக்கெட் மணி' உதவும். தாய்மார்கள் இந்த அளவிற்கு செய்யக் கூடிய வகையில் புத்திசாலிகள் தான். எனவே, கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளுடன், குறைந்தபட்சம் 20 ரூபாயாவது பர்ஸில் பாதுகாப்பாக வைத்திருங்கள். 

• இயற்கையின் அழைப்பு நமக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். எனவே, பிரத்யோகமாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சில டாம்பன்ஸ் அல்லது பேட்கள் அட்டைகளை கையில் வைத்திருக்க வேண்டும். 

• நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எந்த சூழல்களையும் எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் ஆஸ்பிரின், டைலெனோல் அல்லது வேறு ஏதாவது வலி நிவாரணியையும் உடன் வைத்திருங்கள். 

• ஒரு பேனாவோ அல்லது பென்சிலோ தேவை என்னும் போது பெண்கள் தங்களுடைய கனத்த கைப்பைகளை ஆழமாக தேடத் தொடங்குவார்கள். எனவே, ஒரு சில பேனாக்களை உங்களுடைய பர்ஸில் வைத்திருப்பதன் மூலம் தேவையை நிறைவு செய்து கொள்ள முடியுமல்லவா! 

• உங்களுடைய அடையாளத்துடன் கூடிய ஒரு அவசரகால தொடர்பு எண்ணை எப்பொழுதும் வைத்திருங்கள்;  உங்களுடைய அடையாளம் இதுதான் என்று கொண்டு வந்து காட்டத் தேவையில்லை. இது மட்டுமல்லாமல், நீங்கள் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டாலோ அல்லது உங்களுக்காக பேச முடியாத நிலையில் இருந்தாலோ இந்த அவசரகால தொடர்பு தகவல் உபயோகமாக இருக்கும். 

• நாம் வாழும் இந்த காலத்தில், பெண்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஏதாவதொரு பொருளை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக ஒரு சிறு கத்தியையோ அல்லது மிளகு ஸ்பிரேவையோ பயன்படத்தலாம். மிளகு ஸ்பிரே நவீனமான ஆயுதமாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாததாகவும் உள்ளன. மேலும் வழியில் எதிர்ப்படும் கெட்ட எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து உங்களை காத்துக் கொள்ளவும் உதவுகின்றன. 

• நான் கீழே குனிந்து எழும் போது, என்னுடைய ஜாக்கெட்டில் ஒரு ஊக்கு இல்லையென்று உணர்ந்தால், அது எனக்கு அவமானமாக இருக்கும். நீங்கள் வேறு வேலையின் நடுவில் இருக்கும் போது என்ன செய்ய முடியும். எனவே, சேஃப்டி பின்களை உங்களுடைய பர்ஸில் வைத்திருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment