• home
Home » » பிரசவ அறையில் கணவரின் அரவணைப்பு தேவை

பிரசவ அறையில் கணவரின் அரவணைப்பு தேவை

பிரசவ அறையில் கணவரின் அரவணைப்பு தேவைபிரசவ வலியை குறைக்கும் வழிகளாக சொல்லபடுகிற மருந்துகள், அக்குபிரஷர் பின் பக்க மசாஜ், முதுகு தண்டுவடத்தில் ஊசி போடுதல் ஆகியன பிரசவத்தை எதிர் நோக்கியுள்ள தாய்க்கு உண்மையான வலியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றே கூற வேண்டும். 

பெரும்பாலான நேரங்களில், வாழ்க்கை துணை பிரசவ நேரத்தில் அந்த பெண்ணுக்கு தேவையான ஆறுதல் வழங்க கூடிய வார்த்தைகளாக எதை சொல்ல வேண்டும். நீங்கள் தற்போது தான் மருத்துவரிடமிருந்து விபரங்களை தெரிந்து கொண்டீர்கள் எனில், அந்த தகவலை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். 

நார்மல் டெலிவெரியாக இருக்கும் பட்சத்தில் அது 4 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் எந்த நேரத்திலும் நடக்கும் என்பதை கர்ப்பிணி பெண் நன்கு அறிவார். அவரது கருப்பை வாய் அவரின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் சவாலாக அமைந்து செயல்முறையை தாமதப்படுத்துகிறது என்ற விபரத்தை அவரிடம் தெரிவிப்பதென்பது அவரின் மன அழுத்தத்தை அதிகரிக்கும். 

மேலும் பிரசவ அறையில் உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பிரசவ வலி என்பது எந்த நிலையிலும் அதீதமான வேதனையை அளிக்க வல்லது. நீங்கள் அவருக்கு ஏதேனும் உதவ விரும்பினால் அவரிடமிர்ந்து வெளிப்படும் அறிகுறிகளை உற்றுநோக்குங்கள். 

அது கர்ப்பிணிக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவை என்பதை உங்களுக்கு தெரிவிக்கும். அவருக்கு வியர்ப்பதை நீங்கள் கண்டீர்கள் எனில் ஏசியை ஸ்விட்ச் ஆன் செய்யுங்கள். குளிர்ந்த நீரில் நனைத்த துண்டினை கொண்டு அவரது முகத்தில் ஒற்றி எடுங்கள். 

அவரது வலியை குறைக்கும் மசாஜ் செய்யுங்கள். அடிப்படை கர்ப்ப கால வகுப்புகளில் சில விஷயங்களை கற்றிருந்து நீங்கள் அதனை முயன்று பார்க்கும் நம்பிக்கை கொண்டவராக இருந்தால் கர்ப்பிணியின் நெற்றியையோ அல்லது தோள்களையோ இதமாக தடவி கொடுக்கலாம். 

அவருக்கு ஆர்வமிருந்தால் அவரிடம் ஏதேனும் பேச்சு கொடுத்தபடி இருங்கள். கர்ப்ப காலத்தில் அவர் எவ்வளவு வலியை தாங்குகிறார் என்பது குறித்தும் குழந்தையின் நலத்தினைப் பொறுத்து எந்த அளவிற்கு தனது சௌகரியங்களை விட்டு கொடுத்துள்ளார் என்பது குறித்தும் நீங்கள் எதுவும் அறிந்திருப்பதில்லை. 

அவர் நிச்சயமாக அனைத்தையும் வேண்டுமென்றே செய்யவில்லை. பிரசவ வேதனையில் இருக்கும் பெண்ணின் செயல்களை உங்களால் சமாளிக்க முடியவில்லை எனில் குழந்தையை சாதகமாக பயன்படுத்தி அவரை பயமுறுத்தாதீர்கள். 

எவ்வாறு உதவுவது அவருக்கு ஆறுதல் அளிக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருந்தாலும், உங்கள் முயற்சியை கை விட வேண்டாம். அவர் இன்னும் போராடி கொண்டிருக்கும் அதே வேளையில் நீங்கள் உங்கள் முயற்சியை தொடருங்கள்.

0 comments:

Post a Comment