• home
Home » » குழந்தை வளர்ப்பு:குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

குழந்தை வளர்ப்பு:குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

Memory Improvement Tips for Children - Child Care Tips and Informations in Tamilஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள், ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல  நமக்கு தோன்றும்.
ஞாபகம் குறித்து சில தகவல்கள்:
நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும்.
இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும். இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும்.
ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்பத் திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும். எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது  இரண்டு: ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல்.
மேலும் நாள் பட்ட ஞாபகம்கூட மறக்க வாய்ப்பு உள்ளது, இதுவும் நல்லது தான். சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.
நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்: explicit & implicit
explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்.
implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்.
நினைவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்:
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துக் கொள்வோம்.
யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது  - ஷார்ட் டெர்ம் மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது - லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது)
இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்:
* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.
* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.
* முழு கவனம் மிக அவசியம்.
* mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்.
உதாரணம்: news - north, east, west, south
* படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.
* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்
* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.
* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.
* தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.
* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.

0 comments:

Post a Comment