• home
Home » » திருமணத்திற்கு முன் பரிசோதனைகளை கட்டாயமாக்க வேண்டும்

திருமணத்திற்கு முன் பரிசோதனைகளை கட்டாயமாக்க வேண்டும்



இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆணும் ,பெண்ணும் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஜாதக பெருத்தம் மட்டும் பார்க்காமல் மருத்துவ சோதனையை செய்து கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக செல்லும். 

திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளையும் பெண்ணும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம், உடல் குறைபாடுகள் ஏதாவது இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதுபற்றி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கலாம். அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் திருமணத்தைத் தவிர்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். 

திருமணங்கள் அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பது சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஏறக்குறைய அனைத்துத் திருமணங்களும் பதிவுசெய்யப்படுகின்றன அல்லவா? 


அதேபோல, உடல் மற்றும் மன நலப் பரிசோதனைகளையும் சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும். வருங்கால மாப்பிள்ளை திருமணத்துக்கு முன்னர் அப்படி என்னதான் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்? வழக்கமான உடல் பரிசோதனை, ஹெச்.ஐ.வி. பரிசோதனை, 

'ஹெபடைடிஸ்  பி' வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் ஹெச்பிஎஸ் ஏஜி(HBsAg) பரிசோதனை, ஹீமோகுளோபின் பரிசோதனை, செமன் அனாலிஸிஸ் எனப்படும் விந்தணுப் பரிசோதனை மற்றும் பீனைல் டாப்ளர் என்னும் ஆண்மை தொடர்பான பரிசோதனைகளை செய்யவேண்டும்!

0 comments:

Post a Comment