சர்வேதேச எயிட்ஸ் தினம்.
எயிட்ஸ் நோய் குறித்தும் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பல தவறான கருத்துக்கள் மற்றும் அபிப்ராயங்கள் உலவி வருகின்றன. சுய கட்டுப்பாடும் ஒழுக்கமின்மையும் தான் எயிட்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் என்றாலும், சம்பந்தமேயில்லாத அப்பாவிகளும் குழந்தைகளும் கூட சில சமயம் அந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கொடுமை.
சமீபத்தில் மதுரா திரு.வீ.கே.டி.பாலன் அவர்களை சந்தித்தபோது தான் எழுதிய ‘சொல்லத் துடிக்குது மனசு’ என்ற நூலை நமக்கு பரிசளித்தார். வாசிக்க வாசிக்க மனதை பிசைந்துவிட்டார். சமூகத்தை இன்று உலுக்கும் பல்வேறு சீர்கேடுகளை குறித்து தனது குமுறல்களை அந்நூலில் கொட்டித் தீர்த்திருக்கும் திரு.பாலன், நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் எயிட்ஸ் குறித்தும் எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நமக்கு இருக்கவேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் ஒரு அற்புதமான கட்டுரையை எழுதியிருக்கிறார்
0 comments:
Post a Comment