
* இரும்புச் சத்து நிறைந்த உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* புரதச் சத்து நிறைந்த நிலக்கடலை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
* உடல் எடையை அடிக்கடி அறிந்து கொள்ள வேண்டும்.
* உணவு சாப்பிட்டவுடன் காபி, டீ போன்ற வகைகளை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* உணவு சாப்பிடும் முன்பு கைகளை சுத்தமாக் வைத்திருக்க வேண்டும்.
* நகங்களில் அழுக்கு சேராமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.
* காலில் செருப்பு அணிவது நல்லது. கால் மூலம் நுழையும் கண்ணுக்குத் தெரியாத கொக்கிப் புழுக்கள் குடலில் இரத்தத்தை உறிஞ்சி, இரத்த சோகையை உண்டாக்கும்.
* சிறுநீர், மலம் கழிக்க சுகாதார கழிப்பறை வசதிகளைப் பயன்படுத்த வேண்டும். மலம் கழித்த பின் கை, கால்களை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதுதான் இரத்த சோகைக்கான காரணமாகும். எனவே, ஹீமோகுளோபின் தேவைப்படுபவர்கள் காய்கறிகளையும், பழங்களையும், இரும்புச் சத்து நிறைந்த கம்பு, கேழ்வரகு உணவு வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.

0 comments:
Post a Comment