மென்மையான சருமத்தில் பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் முடி வளர்வது. அதிலும் சில பெண்களுக்கு முகத்தில் ஆண்களைப் போல் மீசை, வளர ஆரம்பிக்கும்.
இப்படி முகத்தில் வளரும் மீசை போன்று வரும் முடிகளை நீக்க வாக்ஸிங், த்ரெட்டிங் மற்றும் ப்ளக்கிங் போன்ற ஹேர் ரிமூவல் முறைகள் இருந்தாலும், இயற்கை முறைக்கு இணையாக வர முடியாது. மேலும் வாக்ஸிங், த்தெட்டிங் போன்றவை தற்காலிகமாக முடிகளை நீக்குமே தவிர, நிரந்தரமாக நீக்க வேண்டுமானால் இயற்கை முறைகளே சிறந்தது.
இங்கு அப்படி முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதோடு, அதன் வளர்ச்சியைத் தடுக்கும் சில வழிமுறைகளை பார்க்கலாம்
• 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.
• கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும். இந்த முறையை வாரம் இருமுறை செய்து வரவேண்டும்.
• பப்பாளி மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
• ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.
Home »
பெண்கள் உலகம்
» பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிக்கு தீர்வு
பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிக்கு தீர்வு
Posted by suj
Posted on 8:39 PM
with No comments
0 comments:
Post a Comment