
கோதுமை - 2 கப்
கேரட் துருவியது - 1 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
ப.மிளகாய் - 1
சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
• கறிவேப்பிலை, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கோதுமை மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
• கரைத்த மாவில் கேரட் துருவல், ப.மிளகாய், உப்பு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து இதில் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
• கேரட் பச்சையாக சாப்பிட பிடிக்காதவர்கள் சிறிது வதக்கிய பின் மாவில் சேர்த்து கொள்ளவும்.
• சத்தான, சுவையான கேரட் கோதுமை தோசை ரெடி.
0 comments:
Post a Comment