
பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் போது அது ஏன் அவ்வகை மாற்றங்களை அடைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். கூட்டு குடும்பத்தில் வாழ்வதில் சில ஆதாயங்கள் இருக்கிறது. ஆனாலும் அதில் பல குறைகளும் இருக்கத் தான் செய்கிறது. கூட்டு குடும்பம் என்று வந்து விட்டால் வீட்டின் மூத்தவரே அந்த குடும்பத்தின் தலைவராக இருப்பார்.
அவர் வயதானவராகவும் கண்டிப்பு தன்மையுடனும் விளங்குவார். இவ்வகை குடும்ப அமைப்பில் தான் ஆச்சாரமும் பழமையான கலாச்சாரங்களும் கடைப்பிடிக்கபடுகின்றன. இது அங்கு வாழும் பலருக்கும் எதிர்மறையான மனநிலையை உண்டாக்கி விடும்.
கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக இது விளங்குகிறது. எப்போதுமே குடும்ப உறுப்பினர்கள் தான் குடும்ப தலைவருக்காக விட்டு கொடுத்து வாழ வேண்டியிருக்கும். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் பெரும்பாலும் பாதிப்படைவது அங்குள்ள பெண்களே.
அந்த குடும்ப அமைப்பில் பொதுவாக பெண்கள் எல்லாம் அடுப்பங்கறையில் அடைபட்டு கிடப்பதால் அவர்களின் திறமைகள் எல்லாம் வீணாய் போகும். இப்படிபட்ட பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதால் பொதுவாக கூட்டு குடும்பத்தில் வசிக்கும் பெண்கள் அந்த சூழலை விட்டு வெளியேற விரும்புவதுண்டு.
மேலும் கூட்டு குடும்ப சூழலோடு ஒத்துப் போய் வாழ்வதிலும் பெண்கள் சிரமப்படுவார்கள். அதனால் உறவுகள் சார்ந்த டிப்ஸ் இருந்தால் மட்டும் பத்தாது; சற்று கவனமாக கையாள வேண்டும். கூட்டுக்குடும்பங்களில் வாழ போகும் பெண்களின் பலவிதமான திறமைகள் வீணாடிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment