• home
Home » » ஆண்களை பார்த்தாலே எரிச்சல் அடையும் பெண்கள்

ஆண்களை பார்த்தாலே எரிச்சல் அடையும் பெண்கள்

ஆண்களை பார்த்தாலே எரிச்சல் அடையும் பெண்கள்ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது. ஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். 

அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும். சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை என்னவென்றால், இத்தகைய செயல்களை பெரும்பாலான ஆண்கள் செய்து வருகின்றனர். 

• ஆண்களின் செயல்களில் மிகவும் மோசமானது என்றால், அது வீட்டை அசுத்தமாக வைத்துக் கொள்வது தான். அவர்கள் எப்போதுமே தங்கள் அறைகளை ஒரு குப்பை போன்று தான் வைத்திருப்பார்கள். அதிலும் எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. 

ஆனால் பெண்களுக்கு எப்போதும் சுத்தத்துடன் இருக்க வேண்டும். ஆகவே இத்தகைய மோசமான சூழ்நிலையைப் பார்த்தவுடன், அவர்கள் கோபமடைந்து சண்டைப் போடுகின்றனர். பெரும்பாலான வீடுகளில் இந்த ஒரு காரணத்திற்காகவே பெண்கள் ஆண்களுடன் சண்டை போடுகின்றனர். 

• நிறைய ஆண்கள் தூங்குவதை விரும்புவார்கள். அதிலும் தனிமையில் மனைவி அருகில் இருந்தால் கூட, அதனைப் பொருட்படுத்தாமல், தூங்குவதையே நோக்கமாக வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், வார இறுதியில் விடுமுறை நாட்களில் மனைவி அல்லது காதலியுடன் நேரத்தை சிறிது நேரம் செலவழிக்காமல், தூங்கிக் கொண்டிருப்பது தான். 

• பொதுவாக ஒருசில ஆண்கள் அவர்களது ஈகோவினால், ரொமான்ஸை சரியான நேரத்தில் வெளிப்படுத்தமாட்டார்கள். ஆகவே பெண்கள் அதனை தாங்காமல், அவர்களே வெளிப்படுத்தி விடுகிறார்கள். உதாரணமாக, பெண்கள் அடிக்கடி ஐ லவ் யூ என்று சொன்னால், ஆண்கள் அதனை மீண்டும் சொல்ல பல மாதங்கள அல்லது வருடங்கள் கூட ஆகும். 

• நிறைய தம்பதியர்கள் சண்டை போடுவதற்கு காரணம், வீடியோ கேம்ஸ் தான். ஏனெனில் ஆண்கள் பலர் தங்கள் நேரத்தை செலவழிக்க வீடியோ கேம்ஸை விளையாடுவார்கள். அத்தகைய விளையாட்டை எப்போதாவது விளையாடினால் பரவாயில்லை. ஆனால் அதனையே எப்போதும் விளையாடிக் கொண்டிருந்தால், எப்படி பிடிக்கும்.

0 comments:

Post a Comment