• home
Home » » அன்றாட சர்ச்சைகள்... சலசலப்புகள்

அன்றாட சர்ச்சைகள்... சலசலப்புகள்

அன்றாட சர்ச்சைகள்... சலசலப்புகள்காதலாகிக் கசிந்துருகுபவர்கள் கூட தம்பதிகளாகிய பின்பு எலியும் பூனையுமாகிவிடுகிறார்கள். காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம் எதுவாக இருந்தாலும் ஒன்றாக வாழ்க்கையை ஓட்டும்போது இல்லறம் அவ்வளவு இனிமையாக இருப்பதில்லை. 

அன்றாடம் சர்ச்சைகள் பிறக்கின்றன, சண்டைகள் வெடிக்கின்றன. சின்னச் சின்ன வேலைகள், விஷயங்களில் யார் பொறுப்பெடுத்துக் கொள்வது என்ற முரண்பாடுதான் காரணம். இவ்வாறு தம்பதிகள் இடையில் அன்றாட வாழ்வில் சலசலப்பை ஏற்படுத்துபவை என்னென்ன என்று ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்படி, பட்டியலிடப்பட்டிருக்கும் விஷயங்கள்... 

குப்பையை கொட்டுதல்: 

மனைவி வெளியே சென்று வேலை பார்த்தாலும்கூட, சமைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, துவைப்பது, 'அயர்ன்' செய்வது, குப்பை கொட்டுவது எல்லாம் அவளின் வேலையே என்பது இன்றும் பல ஆண்களின் எண்ணம். 

சில ஆண்கள், வெளியே குப்பையைக் கொண்டுபோய் கொட்டுகிறார்கள் என்றாலும், குப்பைகளை ஒழிப்பது பெண்களின் வேலையே என்று பல ஆண்களுக்குள் படிந்துபோயிருக்கிறது. தப்பித்தவறி என்றாவது அந்த வேலையை மனைவி சொன்னாலும் கணவன்மார்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள். 

'ரிமோட் கண்ட்ரோல்': 

டி.வி. ரிமோட் கண்ட்ரோலை யார் வைத்திருப்பது என்பது பல வீடுகளில் சின்னச் சின்ன சண்டைகளுக்குக் காரணமாகிறது. குறிப்பாக, தம்பதிகள் இருவரும் வெவ்வேறு தொலைக்காட்சி ரசனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

ஒரே டி.வி.யில் குறிப்பிட்ட நேரத்தில் இருவரும் வெவ்வேறு தொடர்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்க விரும்பும்போது பிரச்சினை தோன்றுகிறது. அதை சமாளிக்கத் தெரியாத தம்பதிகள் சண்டைவரை போய் விடுகிறார்கள். 

மின்சார பில்: 

வீட்டில் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதில் குடும்பத்தினர் எல்லோருமே அலட்சியமாகத்தான் இருக்கிறார்கள். அதனால் மின்சார பில் 'சுரீர்' என்று சுடும்போதுதான் விவாதம் பிறக்கிறது. கணவன்- மனைவி இருவரும் ஒருவரையருவர் குற்றஞ்சாட்டிக்கொள்கிறார்கள். சின்னச் சின்ன சீண்டல் வார்த்தைகளில் ஆரம்பிப்பது, கடும் சண்டை வரை போகிறது. 

துணி துவைப்பது:

துணிகளைத் துவைப்பதை பெண்கள் பெரும்பாலும் விரும்புவதேயில்லை. ஆனால் யாராவது ஒருவர் அதைச் செய்துதானே ஆக வேண்டும்? அங்கே தான் பிரச்சினைப் புயல் மையம் கொள்கிறது. இந்த விஷயத்தில் குழந்தைகளை ஒன்றும் கூற முடியாது என்பதால், கணவன் மனைவியும்தான் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள். 

இரவு விளக்கு: 

படுப்பதற்கு முன், யார் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று சரிபார்ப்பது என்பது இன்னொரு சர்ச்சை சமாச்சாரம். அதிலும் ஒரு விளக்கு, உதாரணத்துக்கு பாத்ரூமில், அணைக்கப்படாமல் விடிய விடிய எரிந்துகொண்டிருந்தது தெரியவந்தால் விடிந்ததுமே முட்டல் மோதல் ஆரம்பித்து விடும்!

0 comments:

Post a Comment