அறுபது வயதான எனக்கு இரு மாதங்களாக முழங்கால் மூட்டுவலி உள்ளது. நாட்டு வைத்தியர், எனக்கு வாயுக் கோளாறு என்றார். எனவே கிழங்கு, பருப்பு உணவை தவிர்த்து வந்தேன். இருப்பினும் மூட்டுவலியில் மாற்றம் இல்லை. நான் என்ன செய்வது?
வாயு கோளாறு என்பது வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்னை. பொதுவாக வாயு கோளாறுகளால் மூட்டுவலி வருவதற்கான வாய்ப்பு இல்லை. உங்கள் மூட்டினை முறையாக ஆய்வு செய்து ரத்தப்பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுத்தால், மூட்டின் பிரச்னை நன்றாக தெரிந்து விடும். அதன்பின் அதற்கு சிகிச்சை வழிகள் பரிந்துரைக்கப்படும். நீங்கள் முதலில் எலும்பு மூட்டு மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறவும்.
0 comments:
Post a Comment