காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும், சிலருக்கு இது ஒரு ‘டைம் பாஸ்’ போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது பெண்கள் தான் என்று ஆண்கள் சொல்வார்கள். ஆனால் ஒருசில ஆண்களும் காதலை டைம் பாஸ் போன்று செய்கிறார்கள். இருப்பினும் அதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம், ஒரு பெண்ணை தன் வலையில் விழச் செய்ய ஆண்கள், அவர்களுக்கு பிடித்தவாறான பல செயல்களை மேற்கொள்வார்கள். அப்படி செய்யும் போது, அவர்களது வலையில் விழுந்து, அவர்களின் மீது பாசம் அதிகரிக்கும் போது, முன்பு அவர்களை மடக்குவதற்கு மேற்கொண்ட செயல்களை செய்யாமல், மேற்கொண்டு தன் வேலையை மட்டும் செய்வார்கள். அப்படி செய்யும் போது, காதலிக்கும் பெண் அவரிடம் சென்று ஏதாவது கேட்டால், அதற்கு எந்த ஒரு விடையும் அளிக்காமல் இருப்பார்கள் அல்லது காரணம் எதையாவது சொல்லி மழுப்பிவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், காதலித்தால் உன் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றினால் தான் காதலிக்கிறேன் என்று அர்த்தமா என்று கேட்பார்கள்.

பொதுவாக காதல் என்றால் இருமனங்கள் ஒருமனமாவது மட்டுமின்றி, ஒருவரின் ஆசையை மற்றவர் தன் ஆசையாய் கருதி நிறைவேற்ற வேண்டும். மேலும் காதலை வெளிப்படுத்தாமல், அது உள்ளது வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று இருந்தால், பின் பிரிவைத் தான் சந்திக்க நேரிடும். இதுப்போன்று காதலைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். இங்கு ‘டைம் பாஸ் பாய்ஸ்’ மேற்கொள்ளும் சில செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து பெண்களே எச்சரிக்கையாக இருங்கள். ஆண்களே! உங்கள் காதல் உண்மையானால், உங்கள் காதலியிடம் இந்த செயல்களை மேற்கொள்ளாமல் இருங்கள்.
நேரம் ஒதுக்கமாட்டார்கள் உங்கள் காதலன் டைம் பாஸிற்காக பழகுகிறான் என்றால், உங்களுடன் நேரத்தை அதிகம் செலவிடமாட்டார்கள். அதுவே உண்மையான காதல் இருந்தால், எப்பேற்பட்ட வேலை வந்தாலும், அதை விரைவில் முடித்துவிட்டு, உங்களை பார்க்காமல் வீட்டிற்கு செல்லமாட்டார்கள்.
ரொமான்ஸிற்காக மட்டும் சந்திப்பார்கள் உங்கள் பாய் ஃப்ரண்ட் உங்களுடன் ரொமான்ஸாக இருப்பதற்கு மட்டும் நேரத்தை செலவழித்து வந்தால், உங்கள் காதலன் தவறான எண்ணத்தில் பழகுகிறான் என்று அர்த்தம்.
உணர்ச்சிகளை மதிக்கமாட்டார்கள் நீங்கள் எவ்வளவு வருந்தி பேசினாலும், அதைப் பற்றி அப்போது மட்டும் வருந்தி, அதை சிறிதும் மனதில் கொள்ளாமல் மீண்டும் தன் வேலையை மட்டும் பார்த்து சென்றால், அதுவும் கெட்ட காதலன் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
கட்டுக்குள் வைப்பார்கள் உங்கள் காதலன் உங்களை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் நடக்குமாறு உங்களிடம் நடந்து கொண்டால், அத்தகைய காதலனை உடனே விட்டுவிடுங்கள்.
சுயநலமாக இருப்பார்கள் காரியம் நடக்க வேண்டுமானால் உங்களிடம் நன்றாக பழகிவிட்டு, பின் அந்த காரியம் முடிந்த பின்னர் அவர்கள் போக்கில் இருந்தால், அது அவர்கள் சுயநலமானவர்கள் என்று அர்த்தம். அப்படி சுயநலம் ஒருவரிடம் இருந்தால், அங்கு காதல் என்பது சுத்தமாக இருக்காது.
பிடிக்காதவருடன் பேசுவது உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்று சொன்ன பின்னரும், உங்களின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாமல், அவர்களிடம் கடலை போட்டால், அத்தகையவரும் சரியான காதலனாக இருக்க முடியாது.
மரியாதை கொடுக்காமல் இருப்பது நீங்கள் தவறான ஒருவனை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை அவர்கள் உங்களை நடத்தும் முறையை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
மன்னிப்பு கேட்கமாட்டார்கள் எப்போது உங்கள் காதலனின் தவறான செயலால் உங்கள் மனம் வருந்துகிறது என்று தெரிந்தும், அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்காமல், தான் செய்தது சரி என்று நினைத்து அப்படியே பேசாமல் இருக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் மேலும் பழகுவதற்கு யோசிக்க வேண்டும்.
பதில் அளிக்க தாமதப்படுத்துவது நீங்கள் போன் செய்யும் போது, அதை எடுக்காமல் இருப்பதுடன், மீண்டும் போன் செய்யாமல் இருப்பார்கள். இதற்கு ஒரு பக்கம் அதிகப்படியான வேலை காரணமாக இருந்தாலும், வேலை முடிந்ததும் உடனே போன் செய்யாமல் இருந்தால், அதுவும் ‘டைம் பாஸ் பாய்ஸ்’ என்று அர்த்தம்.
அவர்களுக்கு நேரம் இருந்தால் மட்டும் தான் உங்கள் காதலன் உங்களை சந்திக்க ஒரு நாள் அல்லது நேரம் ஒதுக்கி இருந்தாலும், அவசரத்திற்கு நீங்கள் எங்காவது அழைக்கும் போது, வேலை உள்ளது என்று இருப்பதும், சரியான நபரை தேர்ந்தெடுக்கவில்லை என்று அர்த்தம்.

0 comments:
Post a Comment