• home
Home » » பீட்ரூட் தோசை

பீட்ரூட் தோசை

பீட்ரூட் தோசைதேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 100 கிராம் 
வெங்காயம் - 1 
ப.மிளகாய் - 1 
தோசை மாவு - 2 கப் 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு 
இஞ்சி - சிறிய துண்டு 
கறிவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை :

• பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். 

• இஞ்சி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும். 

• பின்னர் துருவிய பீட்ரூட்டை போட்டு 7 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும். 

• பீட்ரூட் கலவை ஆறியதும் அதை தோசை மாவில் போட்டு நன்றாக கலக்கவும். 

• தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடிமனாக ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். 

• சுவையான, சத்தான பீட்ரூட் தோசை ரெடி 

• குழந்தைகள் பீட்ரூட் சாப்பிடாது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடும்.

0 comments:

Post a Comment