
சிலர் அவ்வாறு எந்நேரமும் இடையூறு தருவது போல் கூறும் அறிவுரைகளைப் பொறுக்க முடியாமல், பெற்றோர்களை எதிர்த்து பேசுவது, சில நேரங்களில் வெறுப்பது என்றெல்லாம் இருப்பார்கள்.
ஆனால் அவ்வாறு பெற்றோர்கள் தங்கள் நலனைக் கருதி கூறும் அறிவுரைகளின் போது எரிச்சல் அடையாமல், அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், அதனால் காயமடையும் தம் மனதை சமாதானப்படுத்தும் வகையிலும் நடக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி சில நேரங்களில் பெற்றோர்களிடம் தமது கருத்துக்களையும் பொறுமையாக எடுத்து சொல்ல வேண்டும். கடவுள் இரண்டு காதுகள் கொடுத்தது எதற்காக தெரியுமா? நல்ல விஷயங்களை கேட்டு கொண்டு, கெட்ட விஷயங்களை மறு காதின் வழியாக விட தான்.
ஆகவே பெற்றோர்கள் ஏதேனும் அறிவுறை கூறும் போது, அப்போது பொறுமையாக கேட்டுக் கொண்டு, அவர்கள் சொன்ன நல்லதை கேட்டு, கெட்டதை மறந்துவிட வேண்டும். பெற்றோர்கள் கோபமூட்டும் வகையில் அறிவுறுத்தும் போது, கோபப்பட்டு குரலை உணர்த்தி பேசாமல், அவர்களிடம் பணிவுடன் "நீங்கள் பேசுவது எரிச்சலூட்டுவதாக உள்ளது" என்று வெளிப்படையாகவும் பணிவுடனும் சொன்னால், பெற்றோர்கள் புரிந்து கொள்வார்கள்.
எப்போது பெற்றோர்கள், அவர்கள் விரும்பிய படி உங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனரோ, அப்போது அத்தகைய செயல்களுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதற்கு பெற்றோர்களிடம் தங்களது விருப்பத்தை சொல்லி, "என் வாழ்க்கை எனக்கு பிடித்தவாறு இருக்க வேண்டும்" என்று ஆசைப்படுவதாகவும் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
0 comments:
Post a Comment