• home
Home » » மாம்பழ மோர்க் குழம்பு

மாம்பழ மோர்க் குழம்பு

மாம்பழ மோர்க் குழம்புதேவையான பொருள்கள்:

நன்கு பழுத்த பெரிய மாம்பழம் ஒன்று 
மோர் 2 - தம்ளர் 
பச்சை மிளகாய் - 2 
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி 
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயத்தைப் போட்டு தாளிக்கவும். 

பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாம்பழம், மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 

அதன்பின் விழுதாக அரைத்த தேங்காய், கசகசா மற்றும் நன்கு அடித்த மோர் சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான மாம்பழ மோர்க்குழம்பு தயார்.

0 comments:

Post a Comment