
கருப்பு சுண்டல் - 1 கப் (ஊற வைத்தது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
தக்காளி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சன்னா மசாலா - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, 1 நிமிடம் வதக்கி, பின் மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள், சன்னா மசாலா சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்பு வேக வைத்துள்ள சுண்டலை சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து பிரட்ட வேண்டும்.
தண்ணீரானது முற்றிலும் சுண்டியதும், அதில் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
சுவையான கருப்பு சுண்டல் பிரட்டல் ரெடி.
0 comments:
Post a Comment