
வைட்டமின் 'டி' பரிசோதனை:
எலும்பு வலி, முதுகு வலி மற்றும் கால் வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும்போது, இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. இது இளம்பெண்கள் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான பரிசோதனையாகும்.
80 முதல் 90 சத வீத இளம்பெண்களின் உடலில் வைட்டமின் 'டி' பற்றாக்குறை உள்ளது. எனவே, அனைத்து பெண்களும் அந்தந்தப் பருவத்தில் வைட்டமின் 'டி' பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ரத்தப் பரிசோதனை மூலமாக இதை அறியலாம்.
வைட்டமின் 'பி 12' பரிசோதனை:
புஜங்கள் மற்றும் கால்களில் உணர்வற்ற நிலையையோ அல்லது குறுகுறுப்பாகவோ இருக்கும் போதும், பலவீனமாக இருப்பதை உணரும்போதும், ரத்தசோகையால் சமநிலையை இழந்திருக்கும் நேரங்களிலும் இந்த பரிசோதனையைச் செய்வது நல்லது.
சைவ உணவு சாப்பிடுபவர்களிடம் இந்தக் குறைபாடு காணப்படுகிறது. இந்த பரிசோதனையை செய்வதன் மூலம் உங்கள் உடலில் வைட்டமின் 'பி 12' எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய முடியும். ரத்தப் பரிசோதனையின் மூலமாக இதை அறியலாம்.
மார்பக பரிசோதனை:
மார்பகங்களில் கட்டிகள் வருவதும், ஒழுங்கற்ற தன்மை இருப்பதும்தான் பிரச்சினைக்கான முதல் அறிகுறி. சுயமாக பரிசோதனை செய்யும்போது கட்டிகள் இருப்பது தெரியவந்தால், 'மாம்மோகிராம்ஸ்' பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இளம்பெண்களால், பெரும்பாலும் தவிர்க்கப்படும் முக்கியமான பரிசோதனைகளில் ஒன்றாக இது உள்ளது. ஒரு பெண் 25 வயதை அடைந்துவிட்டாலேயே இந்த பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment