• home
Home » » வீட்டில் ஜிம் வைக்கும் முன் கவனிக்க வேண்டியவை

வீட்டில் ஜிம் வைக்கும் முன் கவனிக்க வேண்டியவை

வீட்டில் ஜிம் வைக்கும் முன் கவனிக்க வேண்டியவைநீங்கள் கட்டமைப்பான உடலமைப்புடன் இருக்க வேண்டுமானால், நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும். ஆனால் உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவால் ஜிம்மிற்கு செல்ல முடிவதில்லை.  

உடலை கட்டமைப்புடன் வைக்க, உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க, உங்கள் வீட்டில் ஒரு சிறிய ஜிம் ஒன்றினை அமைத்திட சில வழிகள் உள்ளது. வீட்டில் ஜிம் அமைப்பதால் மற்றொரு பயனும் உள்ளது; 

வீட்டை விட்டு வெளியே செல்ல தேவையில்லை, ஜிம் கருவிகளை வாங்கி வீட்டிலேயே ஜிம்மை அமைத்து விட்டால், நேரம் கிடைக்கும் போது நீங்கள் உடற்பயிற்சி செய்து கொள்ளலாம். வீட்டில் ஜிம் வைப்பதற்கான அத்தியாவசிய தேவைகள் சிலவற்றை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொண்டு, உங்கள் வீட்டை உடற்பயிற்சி செய்ய சிறந்த இடமாக மாற்றுங்கள். 

• உங்கள் தசைகளின் மீது கவனம் செலுத்த, உங்கள் வீட்டில் உங்கள் சொந்த புல் அப் பாறை தயார் செய்யலாம். வீட்டில் ஜிம் வைக்க தேவையான அத்தியாவசிய பொருளில் இதுவும் ஒன்று; முக்கியமாக ஆண்களுக்கு. 

• உங்கள் தொடையில் உள்ள எடையை குறைக்க ஸ்கிப்பிங் கயிற்றைப் பயன்படுத்துங்கள். பெண்களுக்கு இது சரியான உடற்பயிற்சியாகும். 

• உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பந்து இருப்பதும் அவசியமாகும். ட்ரெட்மில் வாங்குவதற்கு முன்பாக இது கண்டிப்பாக இருந்தாக வேண்டும். 

• வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் ஜிம்மில் வைக்க வேண்டிய கருவிகளில் உடற்பயிற்சி பாய் மற்றொரு அதிமுக்கிய பொருளாகும். உடற்பயிற்சி செய்வதற்கு பாய் இல்லாமல் தரையில் படுப்பது கஷ்டமாக இருக்கும். மேலும் இதனால் உங்கள் முதுகில் கூட வலி எடுக்கலாம். 

• கைகளிலும், கால்களிலும் நிறத்தை பெற்றிட, வீட்டில் வைக்கப்படும் ஜிம்மில் தடுப்பாற்றல் பேண்ட்டுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும். குறைந்த விலையில் இவ்வகை பேண்ட்டுகளைப் பெறலாம். 

• வீட்டில் அமைக்கும் ஜிம்மிற்கு தேவையான மற்றொரு முக்கியமான கருவி தான் ட்ரெட்மில். இதயத்திற்கும் கால்களுக்கும் நல்ல கருவியாக விளங்குகிறது ட்ரெட்மில். அதனால் இது வீட்டில் அமைக்கப்படும் ஜிம்மிற்கு இது ஒரு அடிப்படை கருவியாக விளங்குகிறது. 

• உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, நம் உடலில் இருந்து அளவுக்கு அதிகமான வியர்வை வெளியேறும். இதயம் அதிக அளவிலான இரத்தத்தை பம்ப் செய்வதால், உடலின் உஷ்ணமும் அதிகரிக்கும். அதனால் வீட்டில் ஜிம் வைக்க வேண்டுமானால், நல்ல காற்றோட்டம் வேண்டும். அதனால் அதற்கு திறந்த ஜன்னல்களும், லேசான திரைகளும் இருக்க வேண்டும்.

0 comments:

Post a Comment