• home
Home » » ஓட்ஸ் ரவா இட்லி

ஓட்ஸ் ரவா இட்லி

ஓட்ஸ் ரவா இட்லிதேவையான பொருட்கள்..... 

தயிர் - அரை கப் 
ஓட்ஸ் - 1 கப் 
ரவை - அரை கப் 
உப்பு - தேவையான அளவு

தாளிக்க.... 

எண்ணெய் - 1 ஸ்பூன் 
கடுகு - 1/4 தே.கரண்டி 
ப. மிளகாய் - 2 
கறிவேப்பிலை - சிறிதளவு 
இஞ்சி - சிறிய துண்டு 

செய்முறை..... 


• முதலில் ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 

• ரவையை வெறும் கடாயில் போட்டு 4 நிமிடம் போட்டு வறுத்துக் கொள்ளவும். 

• இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 

• கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும். 

• பெரிய பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், வறுத்த ரவை, தயிர், தாளித்த பொருட்கள், தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து இதனை 30 நிமிடம் ஊற வைக்கவும். 

• பிறகு இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்

0 comments:

Post a Comment