• home
Home » » ஜிம்முக்கு போகாமலே எடையை குறைக்கும் பயிற்சிகள்

ஜிம்முக்கு போகாமலே எடையை குறைக்கும் பயிற்சிகள்

ஜிம்முக்கு போகாமலே எடையை குறைக்கும் பயிற்சிகள்வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. 

கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்த பிறகு, இரண்டு கைகளையும் உயரே தூக்கி, முதுகுப்புறமாய்ச் சற்றே வளைத்துப் பின் அவற்றை மெல்லக் கீழே கொண்டுவந்து இரண்டு கைகளாலும் இரண்டு கால்கட்டை விரல்களைத் தொடவும். 

இவ்வாறு குனியும்போது மூச்சை மெல்ல வெளியேற்ற வேண்டும். பின் பழைய நிலைக்கு மெல்ல இரு கைகளையும் உயர்த்தவும். இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு தொடக்கத்தில் இருபது முறை செய்யலாம். போகப்போக, எண்ணிக்கையை அதிகரிக்கலாம். 

உடற்பயிற்சி செய்கையில், உடலை மிகவும் தளர்வாகவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அளவுக்கு மீறிய இறுக்கத்திலும் வைத்துக்கொள்ளக் கூடாது. நடுநிலையான இறுக்கத்துடன் உடல் இருக்க வேண்டும்

0 comments:

Post a Comment