
முழு பாசிப்பயறு-1 கப்,
வெந்தயக்கீரை-1 கட்டு,
வெங்காயம் -2,
தக்காளி-2,
பூண்டு-10,
மிளகாய் தூள் -1 ஸ்பூன்,
தேங்காய் பால் -1/4 கப்,
கடுகு தூள்-2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் -2 ஸ்பூன்,
சீரகம் ,சோம்பு, பச்சை மிளகாய்-3
செய்முறை :
• வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
• கீரையை நன்றாக அலசி வைக்கவும்.
• பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
• முதல் நாள் இரவே பாசிப்பயிறை ஊறவைக்கவும். அதையும், கீரையையும் குக்கரில் போட்டு வேகவைக்கவும்.
• தக்காளியை சிறிது நேரம் சுடு நீரில் போட்டு மூடிவைத்து பின் தோலுரித்து அதை மிக்ஸியில் கூழ் போல் செய்யவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்,சோம்பு, மிளகாய் போட்டு தாளித்து. அதில் வெங்காயம் சேர்த்து லேசான நிறம் மாறும் வரை வதங்கிய பின்னர் அதில் பூண்டு, தக்காளி சாறு சேர்த்து வதக்கவும்.
• வதங்கியதும், அதில் வெந்த பயறு, கீரை கலவையை சேர்க்கவும்.
• லேசாக கொதிக்கும் போது உப்பு சேர்த்து கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
• தேங்காய் பால் சேர்த்த பிறகு நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம். இதை ஃபுல்கா, சப்பாத்தி, சாதத்தோடு பரிமாறலாம்.
0 comments:
Post a Comment