• home
Home » » சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவா அடை

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவா அடை

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவா அடைதேவையான பொருட்கள்: 

கோதுமை ரவா - 1 கப் 
துவரம்பருப்பு - 1/2 கப் 
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் 
பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 4 
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்றவாறு 
வெங்காயம் - 1 
கறிவேப்பிலை - சிறிது 
நல்லெண்ணை - தேவையான அளவு 

செய்முறை: 

• பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். 

• கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும். 

• பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 

• அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும். 

• கறிவேப்பிலை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். 

• தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணெய் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறு புறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுக்கவும். 

• சத்தான, சுவையான அடை ரெடி. 

0 comments:

Post a Comment