• home
Home » » கிரீன் சூப்

கிரீன் சூப்

கிரீன் சூப்தேவையான பொருட்கள் : 

வெண்ணெய் - 1 ஸ்பூன் 
பட்டாணி - அரை கப் (வேக வைத்தது) 
புதினா இலை - அரை கப் 
வெங்காயத்தாள் - 1 கப் (பொடியாக நறுக்கியது) 
வெங்காயத்தாளில் உள்ள வெங்காயம் - அரை கப் (பொடியாக நறுக்கியது) பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
மிளகு தூள் - தேவையான அளவு 
காய்கறி வேகவைத்த தண்ணீர் - 2 கப் 

செய்முறை :

• கடாயில் வெண்ணெய் போட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். 

• அடுத்து அதில் வெங்காயத்தாள், புதினா, முக்கால் பாகம் பட்டாணி போட்டு சிறிது நேரம் வதக்கவும். 

• பின்னர் அதில் காய்கறி வேகவைத்த தண்ணீர் 1 கப் ஊற்றி நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

• மீண்டும் இந்த அரைத்த கலவையை அடுப்பில் வைத்து மீதமுள்ள பட்டாணி, காய்கறி தண்ணீர், வெங்காயத்தாள் சேர்த்து சிறிது கொதி வந்ததும் மிளகு தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும். 

• சத்தான, சுவையான கிரீன் சூப் ரெடி

0 comments:

Post a Comment