• home
Home » » அழுத ஒரு வயதுக் குழந்தையை தரையில் அடித்தே கொன்ற தந்தை!

அழுத ஒரு வயதுக் குழந்தையை தரையில் அடித்தே கொன்ற தந்தை!

அழுது கொண்டிருந்த ஒரு வயது நிரம்பிய குழந்தை ஒன்று அழுகையை நிறுத்தவில்லை என்ற காரணத்தால் குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று மஹாஓயா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.


காவிந்த பிரபோத் தென்னக்கோன் என்ற குழந்தையே இவ்வாறு நிலத்தில் அடித்து தந்தையாலேயே கொலை செய்யப்பட்டுள்ளது.

விடயம் அறிந்த தெஹியத்தகண்டிய பொலிஸார் தந்தையைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி முன்னிலையில் சாட்சியமளித்த குழந்தையின் தாயார் கூறுகையில்,

தனது குழந்தை தொடர்ந்து அழுதமையினால் தனது கணவன் குழந்தையை நான் கேட்டும் கொடுக்காமல் ஆத்திரம் கொண்டு குழந்தையை பலமாகக் குலுக்கியதுடன் மட்டுமல்லாது குழந்தையை தரையிலும் அடித்தார். உடனே குழந்தையை நான் தூக்கும்போது குழந்தை நினைவிழந்த நிலையிலேயே இருந்தது.

அதயைடுத்து நான் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். அம்பாறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனது குழந்தை பேராதனை அரசினர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயனளிக்காமல் குழந்தை மரணமானது என கதறி அழுது கூறினார்.

0 comments:

Post a Comment